🙏💁‍♂ *School Morning Prayer Activities - 03.08.2018* *🙏🙏பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:* *திருக்குறள்*  *பழமொழி* *பொன்மொழி* *இரண்டொழுக்க பண்பாடு* *இன்று* *பொது அறிவு* *நீதிக்கதை* *இன்றைய செய்தி துளிகள்* - STUDENTMALAR

Breaking

      STUDENTMALAR

.

  • Home
  • Teachers zone
  • Students zone
  • School zone
  • News
  • Health
  • Go/proceedings
  • 1-5
  • 6-8
  • 9-10
  • 11-12
  • TNPSC/UPSC
  • TRB/TNTET/CTET
  • GAMES
  • CINIMA/Cocking
  • Jobs

1

Post Top Ad

Home Unlabelled 🙏💁‍♂ *School Morning Prayer Activities - 03.08.2018* *🙏🙏பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:* *திருக்குறள்*  *பழமொழி* *பொன்மொழி* *இரண்டொழுக்க பண்பாடு* *இன்று* *பொது அறிவு* *நீதிக்கதை* *இன்றைய செய்தி துளிகள்*

🙏💁‍♂ *School Morning Prayer Activities - 03.08.2018* *🙏🙏பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:* *திருக்குறள்*  *பழமொழி* *பொன்மொழி* *இரண்டொழுக்க பண்பாடு* *இன்று* *பொது அறிவு* *நீதிக்கதை* *இன்றைய செய்தி துளிகள்*

Numaralogy ஆகஸ்ட் 02, 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

உரை:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

பழமொழி :

A word hurts more than a wound

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு

பொன்மொழி:

தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

- டிரெட்ஸி

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
சரோஜினி நாயுடு

2.எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்?
பச்சேந்திரி பால்

நீதிக்கதை :

வண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை
(Butterfly's Last Wish - Kids Story)

அரச மரத்தடியில் எறும்புக் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. தங்களுக்குத் தேவையான உணவை மழைக்காலத்துக்கு முன்பாகவே சேர்த்து விடுவதற்காக சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருந்தன எறும்புகள்.

அந்தப் பக்கம் வந்த வண்ணத்துப்பூச்சிக்கு எறும்புகளைக் கண்டதும் ஏனோ வம்பு இழுக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய அழகான இறக்கைகளை வேகமாக அடித்துக்கொண்டு பறந்தது.

திடீரென்று நிழல் படிவதையும் வேகமாகக் காற்று வீசுவதையும் கண்ட எறும்புகள் என்னவோ ஏதோவென்று நிமிர்ந்து பார்த்தன.

“அட! வண்ணத்துப்பூச்சியா? நான் ஏதோ பெரிய கழுகு என்றல்லவா பயந்தேன்” என்றது ஒரு சிற்றெறும்பு.

“யாராக இருந்தால் நமக்கென்ன? ஏன் பயப்படணும்? நமக்கு நிறைய வேலை இருக்கு. வண்ணத்துப்பூச்சி கிட்ட அரட்டையடிக்க நேரமில்லை?” என்றது மற்றோர் எறும்பு.

எறும்புகள் தன்னைக் கண்டுகொள்ளாமல் வேலையில் மூழ்கியிருந்ததைக் கண்ட வண்ணத்துப்பூச்சிக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

இந்த எறும்புகளுக்குத் தான் யார் என்று காட்ட வேண்டும் என்று நினைத்தது. இன்னும் கொஞ்சம் வேகமாகத் தனது இறக்கைகளை அசைத்தபடி எறும்புக் கூட்டத்துக்கு வெகு அருகில் சென்றது.

சாதாரணமாகக் காற்றடித்தாலே எறும்புகள் பறந்துவிடக்கூடியவை. வண்ணத்துப்பூச்சியின் வேகமான சிறகசைப்பு, எறும்புகளுக்குப் புயல் காற்றைப் போலிருந்தது.

எறும்புகள் நிலை தடுமாறின. கையிலிருந்த உணவுப் பொருட்களைக் கைவிட்டன. வரிசை கலைந்தது. பறந்து போய் விழுந்ததில் பல எறும்புகளுக்குக் காயம் ஏற்பட்டன.

சில எறும்புகள் வேகமாகச் சென்று ராணி எறும்பிடம் முறையிட்டன.

ராணி எறும்பு வண்ணத்துப்பூச்சிக்கு அருகில் வந்தது.

“அழகான வண்ணத்துப்பூச்சியே, எங்களை வேலை செய்யவிடாமல் ஏன் தொந்தரவு செய்கிறாய்? இது சரியில்லையே” என்று அமைதியாகவும் அன்பாகவும் சொன்னது.

“ஏய்! அற்ப எறும்பே! எனக்கு வேறு வேலை இல்லையா? நான் பாட்டுக்குப் பறந்து செல்கிறேன். இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?” என்று கிண்டலாகச் சிரித்தது வண்ணத்துப்பூச்சி.

“ நீ அருகில் வந்து வேகமாக உன் இறக்கைகளை அசைப்பதால் எங்களால் சரியாக நடக்க முடியவில்லை. பலருக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் நீ சற்றுத் தள்ளி உன் விருப்பம் போல வேகமாகப் பறந்து செல்லலாமே” என்றது ராணி எறும்பு.

“என்னது! எனக்கு நீ ஆணையிடுகிறாயா? அதெல்லாம் உன் கூட்டத்தோடு வைத்துக்கொள். நான் சுதந்திரமானவன். இங்கேதான் பறப்பேன். உன்னால் முடிந்ததைச் செய்” என்றது வண்ணத்துப்பூச்சி.

தன் கூட்டத்தைப் பார்த்து, “நண்பர்களே! எல்லோரும் புற்றுக்குள் வாருங்கள். சற்று ஓய்வெடுத்துவிட்டுப் பிறகு நம் வேலையைத் தொடங்கலாம்” என்றது ராணி எறும்பு.

எறும்புகள் அனைத்தும் புற்றுக்குள் சென்றன.

“பயந்துகொண்டு ஓடிவிட்டன. எனக்கே வெற்றி” என்று சத்தமாகக் கூறிக் கொண்டே இன்னும் வேகமாகப் பறந்து சென்றது வண்ணத்துப்பூச்சி.

அப்போது இரையைக் குறிபார்த்து வேகமாக வந்துகொண்டிருந்த பெரிய வண்டு ஒன்று, வண்ணத்துப் பூச்சி மீது மோதிவிட்டது.

எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் வண்ணத்துப்பூச்சி தன் இறக்கைகளை இழந்து, பொத்தென்று எறும்புப் புற்றுக்கு அருகில் விழுந்தது.

வலியுடன் வண்ணத்துப்பூச்சி பறக்க முயன்றது. ஆனால், பறக்க முடியவில்லை. தொடர் முயற்சியால் சோர்வுற்றது. பாதி மயங்கிய நிலையில் அப்படியே வெயிலில் கிடந்தது.

சிறிது நேரம் கழித்து ராணி எறும்பு தனது ஒற்றர் எறும்பிடம் மேற்பரப்பின் நடமாட்டத்தைக் கண்காணித்து வரச் சொன்னது.

மேலே வந்த எறும்பு, சுற்றும் முற்றும் பார்த்தது. அங்கே வண்ணத்துப்பூச்சியைக் கண்டது. அருகில் சென்று பார்த்தது. நிலைமையை உணர்ந்தது. உடனே தகவல் கூற புற்றுக்குள் விரைந்தது.

“ராணியே! நம்மை பயமுறுத்திய அந்த வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் உடைந்து தனியே விழுந்துகிடக்கின்றன. அதுவும் மயங்கிய நிலையில் இருக்கிறது” என்றது உளவு பார்த்த எறும்பு.

“ஐயையோ… என் மனம் வேதனை அடைகிறது. வாருங்கள், நாம் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்ப்போம்” என்று நண்பர்களை அழைத்தது ராணி எறும்பு.

எறும்புகள் விரைந்தன.

“ஏதாவது செய்து அந்த வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றுங்கள்” என்று ஆணையிட்டது ராணி எறும்பு.

எறும்புகள் உதவிச் செய்யத் துடிப்பதைக் கண்ட வண்ணத்துப்பூச்சி, தான் செய்த செயலுக்கு வருந்தியது.

“எறும்புகளே, நான் உங்களைத் துன்புறுத்தினேன். ஆனாலும் என்னைக் காப்பாற்றத் துடிக்கிறீர்கள். என் தவறை உணர்ந்துவிட்டேன். நம்மைப் போன்ற பூச்சி இனங்கள் இறந்துவிட்டால் நீங்கள்தான் தூக்கிச் சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை” என்றது வண்ணத்துப்பூச்சி.

“அப்படியே ஆகட்டும்” என்றது ராணி எறும்பு.

அன்றிலிருந்து சகப் பூச்சிகள் இறந்தால் எறும்புகள் எல்லாம் சேர்ந்து, தூக்கிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.

இன்றைய செய்தி துளிகள் :

1.ஆதார் அட்டையில் முகவரியை மாற்றிக் கொள்ள ரகசியக் குறியீட்டை பயன்படுத்தும் முறை அறிமுகம்

2.தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றம்

3.திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் விசாரிப்பு

4.25,000 மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆடிட்டர் படிப்பிற்காக சிறப்பு சிறப்பு பயிச்சி -அமைச்சர் செங்கோட்டையன்!

5.உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர்: காலிறுதிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து

s

Contributors

  • My photoRAJKUMAR SATHISH

  • RAJKUMAR SATHISH

Archive

Labels

Report Abuse

BTemplates.com

  • Home
  • asiriyar
  • Tweet
  • Share
  • Pin it
  • Whatsapp
  • Comment
Author Image

About Numaralogy

By Numaralogy at ஆகஸ்ட் 02, 2018
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

Subscribe Here

Author Details

One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates

C

Blogger இயக்குவது.

STUDENTMALAR

7 th pay commission

      STUDENTMALAR

Social Widget

  • Home
  • News
  • Mega Tabs
  • News
  • Home

இந்த வலைப்பதிவில் தேடு

Label

  • +2
  • 10
  • 10 std
  • 11
  • 1std
  • 25%
  • 6 std
  • 9 std
  • அமைச்சர்
  • இலங்கை
  • கவிதை
  • கஜா புயல்
  • நீதிமன்றம்
  • பயிற்சி
  • முதல்வர்
  • வெளிநாட்டு படிப்புகள்
  • ஜாக்டோ ஜியோ
  • adhaar card
  • Astro
  • automobile
  • Award
  • B.ed
  • BEO
  • books
  • Budget
  • CBSE
  • CEO
  • CM
  • CM CELL
  • college news
  • corona
  • CPS
  • CSR
  • CTET
  • D.T.E
  • DA
  • DEE
  • DEO
  • Director
  • EMIS
  • Employment
  • Exam timetable
  • food
  • Forms
  • Games
  • GATE
  • Go
  • government job
  • Gpf
  • Health
  • ICSE
  • IFHRMS
  • Ii
  • IIT
  • Income Tax
  • ISRO
  • ITK
  • JEE
  • Job
  • Jobs
  • Kalvi TV
  • MBBS
  • NEET
  • news
  • NHIS
  • NMMS
  • NTSE
  • Pancard
  • proceedings
  • RAILWAYS EXAM MATERIALS
  • Results
  • RH
  • RTI Letter
  • salary software
  • Sbi kyc
  • School Morning Activities
  • School news
  • spd
  • STD 4
  • Std1
  • std2
  • std3
  • std4
  • std5
  • std7
  • std8
  • std8std3
  • Student news
  • TADACCOM
  • TANCET
  • Teachers news
  • Technology
  • then cittu magazine
  • TNGEA
  • TNPSC
  • TNPTF
  • Tnsed app
  • Tntet
  • TRB
  • UDISE +
  • UPSC
  • Video
  • whatsapp
  • Home
  • About
  • Sitemap
  • Contact
  • Forum
MENU
  • நீதிமன்றம்
  • HEALTH
  • EMIS
  • TNPSC
  • Proceedings
  • School zone
  • teachers zone
  • jobs
  • student zone
  • Home
  • News

Our websites

      STUDENTMALAR
      STUDENTMALAR

Pages

  • Tamilithal
  • ASIRIYARMALAR
  • Home
  • PRIMARY STUDY MATERIALS
  • 12 Std study materials
  • 1std to 10 std Guide
  • UPPER PRIMARY MATERIALS
  • TNPSC & TRB STUDY MATERIALS
  • TERM 2. 1-5. STD ALL SUBJECT BOOKS PDF
  • தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்

Comments

..

பிரபலமான இடுகைகள்

  • உங்கள் INCOME TAX CALCULATION ஒரே நிமிடத்தில்...Income Tax Calculation Software for AY 2026-27 ( FY 2025-26 )
      அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கவனத்திற்கு ...  இந்த ஆண்டிற்கான INCOME TAX EXCEL CALCULATION SHEET  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது....
  • தமிழ்நாடு அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு
    பணியிடங்கள், ஊதியம் மற்றும் தகுதிகள்: சரக்கரை காப்பாளர் (1 பணியிடம்): ஊதியம்: மாதம் ரூ.13,200 - ரூ.41,800 (Pay matrix-14). கல்வித்தகுதி: ...
  • School morning prayer activities 19.1.2026
      திருக்குறள்   குறள்  241:  அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்  பூரியார் கண்ணு முள.                    விளக்க உரை:  பொருள்களாகி...
  • தனியார் துறை வேலைவாய்ப்புகள்
     Job vacancy: click here 
  • NCHM-JEE தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு
     NCHM JEE 3 Year B.Sc., Hospitality and Hotel Administration Last Date: 25.03.2026 Exam Date: 25.04.2026 Fees 1000 / 450 National council fo...
  • School morning prayer activities 8.1.2026
      திருக்குறள்   குறள்   296:  பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.                 விளக்க உரை:  ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்...
  • மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு
     
  • Private school and college jobs
     School & college jobs : click here 
  • ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு
     சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 116 (83 ஆண் + 33 பெண்) ஊர்க்காவலர் பணியிடங்களை நிரப்ப 10.10.2025 முதல் 15.10.2025 வரை விண்ண...
  • திறந்தநிலை பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் பி.பார்ம், டி.பார்ம், பார்ம்.டி படிப்புகளில் சேரலாம்
      திறந்தநிலை பள்​ளி​களில் படித்து தேர்ச்சி பெற்​றவர்​கள் பி.​பார்ம், டி.​பார்ம், பார்ம்​.டி படிப்​பு​களில் சேரலாம். மத்​திய, மாநில பாடத் திட...

Recent

  • தமிழ்நாடு அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு
    பணியிடங்கள், ஊதியம் மற்றும் தகுதிகள்: சரக்கரை காப்பாளர் (1 பணியிடம்): ஊதியம்: மாதம் ரூ.13,200 - ரூ.41,800 (Pay matrix-14). கல்வித்தகுதி: ...
  • திறந்தநிலை பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் பி.பார்ம், டி.பார்ம், பார்ம்.டி படிப்புகளில் சேரலாம்
      திறந்தநிலை பள்​ளி​களில் படித்து தேர்ச்சி பெற்​றவர்​கள் பி.​பார்ம், டி.​பார்ம், பார்ம்​.டி படிப்​பு​களில் சேரலாம். மத்​திய, மாநில பாடத் திட...
  • School morning prayer activities 19.1.2026
    School morning prayer activities 19.1.2026
      திருக்குறள்   குறள்  241:  அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்  பூரியார் கண்ணு முள.                    விளக்க உரை:  பொருள்களாகி...
  • யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்
    யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்
    யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த சத்குரு ஜாக்கி வாசுதேவ் . மனித செயல்களால் யானைகள் இறப்பதும், யானைகள் காரணமாக மனிதர்கள் இறப்பதும் சமீப காலங்...
  • MBBS இடத்தை ஒப்படைத்து BE படிப்பில் சேர்ந்த 7 மாணவர்கள்!!!
    MBBS இடத்தை ஒப்படைத்து BE படிப்பில் சேர்ந்த 7 மாணவர்கள்!!!
    பி.இ. கலந்தாய்வின் முதல் நாளில் 7 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடத்தை ஒப்படைத்துவிட்டு, பொறியியல் படிப்புகளில் சேர்ந்தனர். அரசு மரு...
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 1ம் தேதி முதல் சம்பளம் உயர்வு
    மத்திய அரசு ஊழியர்களுக்கு 1ம் தேதி முதல் சம்பளம் உயர்வு
  • உங்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை என விஜயகாந்த் கைவிரிப்பு தேமுதிக நிர்வாகிகள் அதிர்ச்சி
    உங்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை என விஜயகாந்த் கைவிரிப்பு தேமுதிக நிர்வாகிகள் அதிர்ச்சி
    விஜயகாந்த்: 'உங்களுக்குக் கொடுக்க என்னிடம் பணம் கிடையாது' என, விஜயகாந்த் கைவிரித்ததால், தே.மு.தி.க.,வினர் கடும் அதிர்ச்சியடைந்து உள...
  • ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு
    ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு
     சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 116 (83 ஆண் + 33 பெண்) ஊர்க்காவலர் பணியிடங்களை நிரப்ப 10.10.2025 முதல் 15.10.2025 வரை விண்ண...
  • உங்கள் INCOME TAX CALCULATION ஒரே நிமிடத்தில்...Income Tax Calculation Software for AY 2026-27 ( FY 2025-26 )
      அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கவனத்திற்கு ...  இந்த ஆண்டிற்கான INCOME TAX EXCEL CALCULATION SHEET  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது....
  •  மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு
    மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு
     
Popular Posts

  • தமிழ்நாடு அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு
    பணியிடங்கள், ஊதியம் மற்றும் தகுதிகள்: சரக்கரை காப்பாளர் (1 பணியிடம்): ஊதியம்: மாதம் ரூ.13,200 - ரூ.41,800 (Pay matrix-14). கல்வித்தகுதி: ...
  • திறந்தநிலை பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் பி.பார்ம், டி.பார்ம், பார்ம்.டி படிப்புகளில் சேரலாம்
      திறந்தநிலை பள்​ளி​களில் படித்து தேர்ச்சி பெற்​றவர்​கள் பி.​பார்ம், டி.​பார்ம், பார்ம்​.டி படிப்​பு​களில் சேரலாம். மத்​திய, மாநில பாடத் திட...
  • School morning prayer activities 19.1.2026
      திருக்குறள்   குறள்  241:  அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்  பூரியார் கண்ணு முள.                    விளக்க உரை:  பொருள்களாகி...
  • யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்
    யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த சத்குரு ஜாக்கி வாசுதேவ் . மனித செயல்களால் யானைகள் இறப்பதும், யானைகள் காரணமாக மனிதர்கள் இறப்பதும் சமீப காலங்...
  • MBBS இடத்தை ஒப்படைத்து BE படிப்பில் சேர்ந்த 7 மாணவர்கள்!!!
    பி.இ. கலந்தாய்வின் முதல் நாளில் 7 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடத்தை ஒப்படைத்துவிட்டு, பொறியியல் படிப்புகளில் சேர்ந்தனர். அரசு மரு...
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 1ம் தேதி முதல் சம்பளம் உயர்வு
  • உங்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை என விஜயகாந்த் கைவிரிப்பு தேமுதிக நிர்வாகிகள் அதிர்ச்சி
    விஜயகாந்த்: 'உங்களுக்குக் கொடுக்க என்னிடம் பணம் கிடையாது' என, விஜயகாந்த் கைவிரித்ததால், தே.மு.தி.க.,வினர் கடும் அதிர்ச்சியடைந்து உள...
  • ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு
     சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 116 (83 ஆண் + 33 பெண்) ஊர்க்காவலர் பணியிடங்களை நிரப்ப 10.10.2025 முதல் 15.10.2025 வரை விண்ண...
  • உங்கள் INCOME TAX CALCULATION ஒரே நிமிடத்தில்...Income Tax Calculation Software for AY 2026-27 ( FY 2025-26 )
      அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கவனத்திற்கு ...  இந்த ஆண்டிற்கான INCOME TAX EXCEL CALCULATION SHEET  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது....
  • மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு
     
FORMS

Add 8667802578 this number in your whatsapp group

Labels

  • Jobs (225)
  • அமைச்சர் (84)
  • Health (77)
  • NEET (33)
  • Technology (31)
  • Astro (20)
  • TNPTF (19)
  • CBSE (13)
  • Games (8)
  • whatsapp (8)

Archive

  • பிப்ரவரி (2)
  • ஜனவரி (12)
  • ஜூன் (1)
  • மே (4)
  • ஜூன் (1)
  • ஜனவரி (2)
  • நவம்பர் (16)
  • அக்டோபர் (4)
  • செப்டம்பர் (12)
  • ஆகஸ்ட் (1)
  • ஜூலை (4)
  • ஏப்ரல் (1)
  • மார்ச் (3)
  • டிசம்பர் (1)
  • அக்டோபர் (3)
  • ஜூலை (5)
  • ஏப்ரல் (1)
  • மார்ச் (1)
  • பிப்ரவரி (3)
  • ஜனவரி (85)
  • டிசம்பர் (66)
  • நவம்பர் (51)
  • அக்டோபர் (79)
  • செப்டம்பர் (116)
  • ஆகஸ்ட் (309)
  • ஜூலை (267)
  • ஜூன் (94)
  • மே (84)
  • ஏப்ரல் (10)
  • மார்ச் (8)
  • பிப்ரவரி (3)
  • ஜனவரி (10)
  • டிசம்பர் (42)
  • நவம்பர் (52)
  • அக்டோபர் (9)
  • செப்டம்பர் (13)
  • ஆகஸ்ட் (24)
  • ஜூலை (23)
  • ஜூன் (24)
  • மே (23)
  • ஏப்ரல் (20)
  • மார்ச் (97)
  • பிப்ரவரி (208)
  • ஜனவரி (174)
  • டிசம்பர் (102)
  • நவம்பர் (232)
  • அக்டோபர் (148)
  • செப்டம்பர் (125)
  • ஆகஸ்ட் (36)
  • டிசம்பர் (18)
  • நவம்பர் (15)
  • அக்டோபர் (17)
  • செப்டம்பர் (25)
  • ஆகஸ்ட் (195)
  • ஜூலை (451)
  • ஜூன் (732)
  • மே (303)
  • ஏப்ரல் (76)
  • மார்ச் (73)
  • பிப்ரவரி (64)
  • ஜனவரி (15)
  • டிசம்பர் (58)
  • நவம்பர் (44)
  • அக்டோபர் (89)
  • செப்டம்பர் (84)
  • ஆகஸ்ட் (102)
  • ஜூலை (129)
  • ஜூன் (58)
  • மே (33)
  • ஏப்ரல் (112)
  • மார்ச் (145)
  • பிப்ரவரி (137)
  • ஜனவரி (110)
  • டிசம்பர் (138)
  • நவம்பர் (99)
  • அக்டோபர் (124)
  • செப்டம்பர் (180)
  • ஆகஸ்ட் (231)
  • ஜூலை (163)
  • ஜூன் (35)
  • மே (9)
  • ஏப்ரல் (15)
  • மார்ச் (59)
  • பிப்ரவரி (66)
  • ஜனவரி (33)
  • டிசம்பர் (93)
  • நவம்பர் (150)
  • அக்டோபர் (161)
  • செப்டம்பர் (26)

Teachers zone

Recent News

Total Pageviews

About Me

  • ASIRIYARMALAR
  • Numaralogy

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Contact

Crafted with by Active | All Rights Are Reserved By Asiriyar Malar