ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியும் வேலை கிடைக்காத விரக்தியில் கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த மலைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(27). இவருக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகிறது. இவர் விலங்கியல் பாடத்தில் Msc,B.Ed முடித்துவிட்டு M.Phil படித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிவு வெளியாகும் இடைபட்ட காலத்தில் படித்த படிப்புக்கு வேலைக்கிடைக்காத காரணத்தினால் தனியார் ஓட்டலில் பணிபுரிந்தும் வந்துள்ளார். இதையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவு வெளியிடப்பட்ட போது ஜெயபிரகாஷ் அதிக மதிபென் பெற்று தேர்ச்சி பெற்றார்.இதனிடையே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடிந்து அரசு ஆசிரியர் பணிக்காக காத்திருந்தார். கடந்த 10-நாட்களுக்கு முன்பு தமிழக அரசால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஆசிரியர் நியமன தேர்வு எழுத வேண்டும் என புதிய அரசானை வெளியிடப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயபிரகாஷ் இனி வேலை கிடைக்காது என எண்ணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜெயபிரகாஷ் தற்கொலை செய்வதற்க்கு முன்னதாக அவர் கைபட எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக