சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியின் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலான 461 மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் 22 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். அப்போது ராஜஸ்தானிய உணவகம் ஒன்றுக்கு மதிய உணவு அருந்தச் சென்றபோது அந்த உணவகத்தின் ஊழியர்கள் சிலர் மாணவர்களைத் தாக்கியுள்ளதாக பள்ளி நிர்வாகம் புகாரளித்துள்ளது. உணவக ஊழியர்களின் இந்தச் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று பள்ளி நிர்வாகம் தனது புகாரில் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்களைத் தாக்குவதற்கு உணவக ஊழியர்கள் பிரம்பை பயன்படுத்தியுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உணவக ஊழியர்களின் மோசமான நடவடிக்கைக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி நிர்வாகம் காவல் துறையினரை வலியுறுத்தியுள்ளது. இந்தப் புகாரையடுத்து சுற்றுலா சென்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உணவகத்திடமும் காவல் துறையினர் நேற்று (டிசம்பர் 3) முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.