மழைக்கால தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க கஜாபுயல் சிறப்பு மருத்துவமுகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மழைக்கால தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க கஜாபுயல் சிறப்பு மருத்துவமுகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்.




உருவம்பட்டியில் மழைக்கால தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க கஜாபுயல் சிறப்பு மருத்துவமுகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்.

அன்னவாசல்,டிச.6 : புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான் மலை அருகே உள்ள உருவம்பட்டியில் மழைக்கால தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க கஜாபுயல் சிறப்பு மருத்துவமுகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் உருவம்பட்டி பள்ளி தலைமையாசிரியர் ஜெ.சாந்தி தலைமையில்  நடைபெற்றது.

முகாமினில் நிலவேம்பு கசாயம் வழங்கி பொதுமக்களிடம் பரம்பூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை சித்த மருத்துவர் சுயமரியாதை பேசியதாவது: மழைக்காலத்தில் தொற்று நோய்களான மலேரியா,காலரா,டெங்கு,சிக்கன்குனியா,டைபாய்டு போன்ற நோய்கள் பரவும்.அதற்கு முன்னெச்சரிக்ககையாக பொதுமக்களாகிய நீங்கள் குடி தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும்.டெங்குவை தடுக்க கொசு ஒழிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.பன்றிக் காய்ச்சலை தடுக்க இருமல்,தும்மல் வரும்  பொழுது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்.நாம் நமது கை,கால்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் 80 சதவீத தொற்றுநோய்களை தடுத்திட முடியும்.தொற்றுநோய்கள் அனைத்திற்கும்  தடுப்பு மருந்தாக நிலவேம்பு கசாயம் உள்ளது...எனவே பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவில் நிலவேம்பு கசாயம் வாங்கி பருக வேண்டும்..அல்லது வீட்டிற்கு நிலவேம்பு வாங்கி வந்து காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும்..இந்த  கஜா புயல் சிறப்பு  மருத்துவமுகாமானது தமிழக அரசின் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆணைக்கிணங்க நம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகிறது என்றார்.

பின்னர் உருவம்பட்டி ஊர்ப்பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்,அங்கன்வாடி குழந்தைகள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.நிறைவாக முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் டெங்கு காய்சல் விழிப்புணர்வு குறித்து அச்சடிக்கப்பட்ட  நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
 
முகாமில் ஊர் நிர்வாகிகள் முத்தன்,ராஜேந்திரன்,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கருப்பையை மருத்திவமனைபணியாளர் காயத்ரி மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர்...

முடிவில் ஆசிரியர் கு.முனியசாமி நன்றி கூறினார்..

Subscribe Here