சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள்


இலுப்பூரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில்  மாற்றுத்திறனாளி மாணவனை குத்துவிளக்கேற்றி  வைக்க செய்து சிறப்பு செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.வனஜா..

அன்னவாசல்,டிச.3:  இலுப்பூரில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினவிழா தொடக்கவிழாவினை பகல்நேர பாதுகாப்பு மையத்தில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவன்  லெட்சுமண குமாரை  குத்துவிளக்கேற்ற வைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா சிறப்பு செய்தார்..

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும்  சர்வதேச மாற்றுத் திறனாளிகள் விழா அன்னவாசல்  வட்டார வளமையத்தின் சார்பில் இலுப்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்றது..

விழாவிற்கு இலுப்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முனைவர்  இரா.சின்னத்தம்பி முன்னிலை வகித்தார்.

 விளையாட்டுப் போட்டியினை கொடியசைத்தும்,கொடியேற்றி வைத்தும்  புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.வனஜா நிகழ்ச்சியினை  தொடங்கி வைத்து கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச  மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது..அதன் படி மாநில திட்ட இயக்குநர் ஆணைப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  13 ஒன்றியங்களிலும்  சர்வதேச  மாற்றுத்திறனாளிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது...இன்றைய தினம்  சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகள் மட்டுமின்றி அவர்களோடு பயிலும் சக மாணவர்களும் பயன்பெறும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு சான்றுகள்,பரிசுகள் வழங்கப்படும் என்றார்..

 முன்னதாக சப் ஜீனியர்,ஜீனியர்,சீனியர்,சூப்பர் சீனியர் என வயதிற்கு ஏற்றவாறு மாணவர்களை பிரித்து அவர்களை பார்வை குறைபாடு உடையவர்களை தனியாகவும்,மனநலம் குன்றிய குழந்தைகளை தனியாகவும்,காது கேட்பதில் குறைபாடு உடைய  மாணவர்கள் தனியாகவும் வகைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ரிங் பால்,உருளைக்கிழங்கு பொறுக்குதல் ,வாட்டர் பாட்டிலில் நீர் நிரப்புதல் ,25 மீட்டர் ஓட்டம்,50 மீட்டர் ஓட்டம்,100 மீட்டர் ஓட்டம் ,நின்ற இடத்தில் நின்று தாவுதல்,மென்பந்து எறிதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது..பின்னர் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது..

விழாவில் சிறப்பாக பாடல் பாடிய அன்னவாசல் ஒன்றியம் மேலூர் தொடக்கப்பள்ளி நான்காம் வகுப்பு  மாணவி அனுஷலெட்சுமிக்கு  ரொக்கப்பரிசு ரூபாய் 1000 -ம் ஓட்டப்பந்தயத்தில் சிறப்பாக ஓட முயற்சித்த  மேலூர் தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவன்  அழகுராசுவுக்கும் ரூ.500 ரொக்கப்பரிசினையும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனைவர் இரா.சின்னத்தம்பி வழங்கிப் பாராட்டினார்..,

இவ்விழாவில் இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்தபள்ளிக் கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பழனிவேலு,இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளி துணைஆய்வாளர் கி.வேலுச்சாமி,அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் அரு.பொன்னழகு,பெ.துரையரசன்,இலுப்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  ஜெயராமன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன்  ஆகியோர் கலந்து கொண்டனர்..

விழாவிற்கான ஏற்பாடுகளை அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு  செய்திருந்தார்..விழாவினை இலுப்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் கிரேஸி தொகுத்து வழங்கினார்..

விழாவில்  ஆசிரியப்பயிற்றுனர்கள்,1 ஆம் முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனுடைய மாணவர்கள்,சக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சிறப்பு ஆசிரியர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...

முடிவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முனைவர் இரா.சின்னத்தம்பி ஆகியோர்  பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்கள்.

Subscribe Here