இலங்கையில் மீண்டும் திருப்பம்.மகிந்த ராஜபக்ஷே நாளை பதவி....... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இலங்கையில் மீண்டும் திருப்பம்.மகிந்த ராஜபக்ஷே நாளை பதவி.......

இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்‌ஷே நாளை விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மகனும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்‌ஷே, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், ”நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, முன்னாள் அதிபர் நாளை பிரதமர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். பொதுமக்களுக்கு ஆற்றும் உரையை அடுத்து அவர் பதவி விலகுவார். அவருடன் இருக்கும் இலங்கைப் பொதுமக்கள் முன்னணியும் இலங்கை சுதந்திரக் கட்சியும், பிற கட்சிகளும் அதிபருடன் இணைந்து பெரிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன” என்று நமல் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று காலை அதிபர் மைத்திரியை, மகிந்த ராஜபக்‌ஷே அவருடைய செயலகத்தில் சந்தித்துப் பேசினார். நேற்றிரவு, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணிலுடன் மைத்திரி பேச்சு நடத்தியதாகவும், அப்போது சபாநயகர் கரு ஜயசூர்யவை பிரதமர் பதவியை ஏற்குமாறு வலியுறுத்தியதாகவும், அதற்கு ரணில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஜயசூர்ய மறுத்ததாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்சுமண யாப்ப அபேவர்த்தனவும் செய்தியாளர்களிடம் இதை உறுதிப்படுத்தினார். நாளை காலை, சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பின்னர் மகிந்த பதவிவிலகுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அதிபர் மைத்திரிக்கும் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ரணிலுக்குமான மோதலில், கடந்த அக்டோபர் 26-ம் தேதியன்று ரணில் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக மகிந்தவை பிரதமராக மைத்திரி நியமித்தார். இரு மாதங்கள்கூட முடிவடையாத நிலையில் பதவிவிலகவேண்டிய நிலைக்கு மகிந்த தள்ளப்பட்டுள்ளார்

Subscribe Here