10க்கு குறைவான மாணவர்கள் பள்ளிகளில் உபரிஆசிரியர்கள் இடம்மாற்றம் செய்ய உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

10க்கு குறைவான மாணவர்கள் பள்ளிகளில் உபரிஆசிரியர்கள் இடம்மாற்றம் செய்ய உத்தரவு




சென்னை:
மிழகத்தில் 10 மாணவர்கள் மற்றும் அதற்கும்  குறைவான மாணவ மாணவிகள் உள்ள பள்ளிகளில் ஒரு ஆசிரியர் தவிர,  உபரி ஆசிரியர்கள் வேறு இடத்திற்கு உடனே மாற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த பள்ளிகளில்  பணியாற்றும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்து, அங்கு உடனடியாக பணியில் ஈடுபட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி கள் என மொத்தம் 38 ஆயிரம் அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம், ஒன்றிய அளவில் பிரிக்கப்பட்டு அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 3 கி.மீ ஒரு பள்ளி என்கிற அளவுக்கு, தமிழகத்தில் பள்ளிகள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2.30 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
மத்திய அரசின் நிதி அயோக் அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் குறைவான மாணவர்கள்  உள்ள பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல்படியாக ஏற்கனவே 46 பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சற்றே நிறுத்தி வைக்கப்பட்டிந்த  நிலையில், தற்போது மீதமுள்ள குறைவான மாணவர்கள் உள்ள  பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது 10 மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் உபரி ஆசிரியர்களை பணிஇடமாற்றம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இரண்டு ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் ஒரு ஆசிரியர், விடுப்பு எடுக்கும்பட்சத்தில் மற்றொரு ஆசிரியர் கட்டாயம் பள்ளிக்கு வந்து வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இவற்றை ஓராசிரியர்கள் பள்ளிகளாக மாற்றும்பட்சத்தில், குறிப்பிட்ட ஆசிரியர் அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டிய சூழல் உள்ளது.
ஏற்கனவே அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தற்போதை நடவடிக்கையால் கல்வித்தரம் மேலும் குறையும் அபாயம் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால், அதை காதில் வாங்க தமிழக அரசு, சம்மந்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை, வேறு பள்ளிக்கு மாற்றி, அங்கு உடனடியாக பணியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என பள்ளிகல்வித்துறை  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Subscribe Here