சந்திராயன்-2 விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னணி... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சந்திராயன்-2 விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னணி...




பூமியின் துணைக்கோளாக இருக்கும் நிலவில் குடியேற மனிதர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையொட்டி அங்குள்ள நிலப்பரப்பு, கனிம வளங்கள், நீர் இருப்பதற்கான வாய்ப்பு, உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஏராளமான நாடுகள் நிலவை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதுவரை எந்த நாடும் சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய முடிவு செய்தது.

இதன் விளைவாக விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம், கடந்த ஜூலை 22ல் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. முதலில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து 5 முறை சுற்றுவட்டப் பாதை மாற்றி அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 14ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள எஞ்சின், பெங்களூரு தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சிக்னல் மூலம் இயக்கப்பட்டது.
இதன்மூலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி சந்திரயான் 2 தனது பயணத்தைத் தொடங்கியது. ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழைந்தது. இதையடுத்து 4 முறை விண்கலத்தின் பாதை மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த 2ஆம் தேதி நிலவிற்கு அருகில் வந்த போது, சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. இது நிலவிற்கு மிக அருகே சுழலுமாறு கொண்டு வரப்பட்டது.
அதேசமயம் விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதி நிலவை 100 கி.மீ தொலைவில் தொடர்ந்து சுற்றி வருமாறு இயக்கப்பட்டுள்ளது. இது ஓராண்டிற்கு நிலவை புகைப்படங்கள் எடுத்து, தரைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். இதன்மூலம் இஸ்ரோ பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று(செப்டம்பர் 7) அதிகாலை நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்க முயற்சி எடுக்கப்பட்டது.
ஆனால் நிலவில் இருந்து 2.1 கி.மீ தூரத்தில் இருக்கும் போது, லேண்டரில் இருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ தலைவர் சிவன், சிக்னல் துண்டிக்கப்பட்டதால் லேண்டர் நிலவில் விழுந்திருக்குமோ என்று ஆராய்ந்து வருகிறோம். விக்ரம் லேண்டரின் சிக்னலை செயல்படுத்த அடுத்த 14 நாட்கள் தொடர்ந்து முயற்சி எடுக்கப்படும். இதில் வெற்றி கிடைத்தால், நிலவில் நமக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும். இந்த திட்டத்தை தோல்வி என்று கூற இயலாது.
ஆர்பிட்டரின் இயக்கத்தால் 95% வெற்றி எனக் கூறினார். இந்நிலையில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தெரிவித்துள்ளார். நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் ஆனது, லேண்டரை புகைப்படம் எடுத்துள்ளது. இது விரைவில் வெளியிடப்படும். லேண்டர் முழுமையாக இருக்கிறது. அதேசமயம் விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு எதுவும் கிடைக்கவில்லை.
இதற்காக தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். நிலவின் தென் துருவத்தில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளி படாமல் உள்ளது. எனவே இது மிகவும் குளிர்ச்சியாக பகுதியாக காணப்படுகிறது. இங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் வெள்ளி, மெர்குரி, அம்மோனியா உள்ளிட்டவையும் இருக்கக் கூடும் என்று நம்பப் படுகிறது.
மிகவும் இருட்டாக இருக்கும் அந்தப் பகுதியில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட லேண்டரை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விஷயம் தான். ஆனால் நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர், தொடர்ச்சியாக நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து வருகிறது. எனவே ஆர்பிட்டரின் கண்களில் லேண்டர் ஏதோவொரு நிலையில் நிச்சயம் விழுந்திருக்கும்.
அதனைப் படம்பிடித்து, அப்படியே தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்திருக்கும். இதனைக் கண்ட விஞ்ஞானிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தி, அதிலுள்ள பிரக்யான் ரோவர் மூலம் நிலவின் தரைப் பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதன்மூலம் ’சந்திரயான் 2’ விண்கலத்தின் 100% வெற்றிக்கு இஸ்ரோ மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Subscribe Here