இன்றைய முக்கிய செய்திகள் 23.09.2019 காலை 10. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய முக்கிய செய்திகள் 23.09.2019 காலை 10.




அமெரிக்காவில் பிரமாண்டமாக நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சி. 50,000 இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலையில், பாகிஸ்தானை சாடிய பிரதமர் மோடி. 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டுவதாக பேச்சு
இந்தியாவில் அனைவரும் சவுக்கியமாக இருப்பதாக தமிழில் பேசிய பிரதமர் மோடி. 5 ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்திருப்பதாக பெருமிதம் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. அமமுக, மக்கள் நீதிமய்யம் போட்டியிடாத நிலையில், மும்முனை போட்டிக்கு வாய்ப்பு
இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக. நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு மோடி, ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதை அடுத்து தங்கும் விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு. அசல் அடையாள அட்டையைப் பெறாமல் அறை ஒதுக்கினால் நடவடிக்கை என எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும் என மு.க.ஸ்டாலின் பேச்சு. ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து அறிவிப்பு
ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, உதித் சூர்யாவிடம் விசாரணை நடத்திய பேராசிரியர் குழுவினரிடம் காவல் துறை விசாரணை. ஆவணங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என காவல் துறை தகவல்
தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு. திருவள்ளூர் அருகே மின்னல் தாக்கி பெண் மரணம். 5 பேருக்கு சிகிச்சை

இந்திய அணியுடனான 3வது டி 20 போட்டியில் தென்னாப்ரிக்கா அபார வெற்றி. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

Subscribe Here