சித்தா, ஆயுர்வதேம் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முதல் நாளில் 400-க்கும் மேற்பட்டோருக்கு இடங்கள் ஒதுக்கீடு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சித்தா, ஆயுர்வதேம் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முதல் நாளில் 400-க்கும் மேற்பட்டோருக்கு இடங்கள் ஒதுக்கீடு




சித்தா, ஆயுர்வதேம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் 400-க்கும் மேற்பட்டோருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ் (ஆயுர்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை  6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. அதேபோல, 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள்  உள்ளன. 
அதற்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் நடைபெற்றது. அதில், அரசு இடங்களுக்கு 1,600 பேரும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 700 பேரும் விண்ணப்பித்தனர்.  அவை பரிசீலனை செய்யப்பட்டு  தரவரிசைப் பட்டியல் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது
இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. 
சிறப்புப் பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு முதலில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. பின்னர், பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதல் நாளில் 400-க்கும் மேற்பட்டோருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

Subscribe Here