ஐந்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வந்ததும் என்னென்ன நடக்கும்!! *இனி ஐந்தாம் வகுப்பு படிப்போர் எல்லாருக்கும் ஸ்பெசல் க்ளாஸ் நடக்கும்.விசேச வீட்டில் எங்க கானோம்னு விசாரித்தால் அவனுக்கு பப்ளிக் எக்சாம் இருக்கு அதான் வரலைனு பெருமையோடு பேசலாம்.
*அஞ்சாவது படிக்கிற பையன் இருக்கான் உனக்கு கேபிள் கனெக்சன் ஒரு கேடா னு வீட்ல கேபிள் கட் பன்னுவாங்க.
செம்பருத்தியில் ஆதியும் பார்வதியும் சேர்த்தாங்களானு தெரியாத ஆயிரம் புதிர்களோடு பப்ளிக் அட்டன் பன்னுவாங்க.
*போகோவும் சுட்டியும் மாற்றிய ரிமோட்கள் இனி வி.ஆர்.எஸ் வாங்கிக்கும்
*எல்லா தனியார் பள்ளியும் எக்ஸ்ட்ரா விளம்பரம் கொடுக்கும்.பள்ளி முன்னால் உள்ள ப்ளக்ஸ் பேனர்ல இருக்கும் ஒவ்வொருத்தனையும் பார்க்கவே பாவமா இருக்கும்.
*கொஞ்சம் சிரிச்சு பேசுனாலும் பப்ளிக் பப்ளிக் னு காமெடி வசனம் மாதிரி அசரீரி ஒலிச்சுக்கிட்டே இருக்கும்
*ஐந்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி..னு கொட்டை எழுத்தில் ஊர் முழுக்க தென்படும்.ஐந்தாம் வகுப்பில் 90%க்கு மேல் பெற்றால் ஆறாம் வகுப்பில் கட்டண சலுகை கிடைக்கும்.
*பப்ளிக் எக்ஸாம் ஹாலில் பரிட்சை தொடங்கிய பத்து நிமிசத்தில் சார் காட்டுக்கு வருது, டூ டாய்லெட் வருது அஞ்சு பேரு கேட்பாங்க. பாவம்யா அந்த சூப்பர்வைசர் நெலம
*சார் பென்சில்ல எழுதலாமா பேனாவில் எழுதனுமா, கேள்விக்கு பதில் சொல்லனும்.
*மூனாவது படிப்பு முடிச்சதும் நாலாவது நடத்தாம அஞ்சாவது புக் நடத்துவாங்க.
நாலாவது பாடம் நடத்தப்படலைனு கல்வியாளர்கள் குற்றச்சாட்டு வைப்பாங்க
*அஞ்சாவது படிக்கிறோம்னு தெருஞ்சதும் கல்யாண வீட்டிலிருந்து கருமாதி வீடு வரைக்கும் தம்பி நம்ம குடும்ப மானம் மருவாதி எல்லாம் நீ எழுதப்போற எக்ஸாம்லதான் இருக்குனு கடுப்பை கிளப்புவாங்க
*எட்டு மணிக்கு பல்லு விளக்கிறவனை நாலு மணிக்கு எழுப்பி 3 ட்யூசன் அனுப்பும் வழக்கம் வரும்.
*சைக்கிள் ஓட்டத் தெரியாதவனுக்கு இனி சைக்கிள் டெஸ்ட் நடக்கும்
*இந்த ஆண்டும் ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆண்களைவிட பெண்களே அதிக மதிப்பெண் பெற்றனர் னு Flash news ஓடும். அப்பாடி அஞ்சாவது பாஸ் பண்ணிட்டோம்னு நினைக்கும்போது அடுத்து 8வது வந்திடும்.
*இந்த வருசம் பப்ளிக் எக்ஸாம் இருக்கு தெரியுமில்லனு வர்றவன் போறவனெல்லாம் சாம்பிராணி போடுவாங்க
*கிரிக்கெட்ல இனி பந்து பொறுக்க ஆள் இருக்கமாட்டாங்க.வீதியில் விளையாடினவனெல்லாம் வீட்டுக்குள்ள இருப்பான்
*பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணும்போது நீ அஞ்சாவதுல எத்தனை மார்க்குனு கேட்பாங்க. இனி பசங்களை ஈஸியா ரிஜக்ட் பன்னுவாங்க
*கும்பலா கோலி விளையாடினவங்க இனி குரூப் ஸ்டடி செய்வாங்க
*P.T பீரியட் கட் ஆகும்.பப்ளிக் பரிட்சை இருக்கு என்ன விளையாட்டுணு வீராப்பு பேசுவாங்க
*டீக்கடையில் அப்பாவும், பக்கத்து வீடுகளில் அம்மாவும் பெருமை பொங்க மார்க் வாங்கினதை பத்தி சிலாகிப்பார்கள்.அவனுக்கு பொங்கு சனி,திசா புத்தி இருப்பதால் படிப்பு நல்லா வரும்னு ஜோசியர் சொல்லியிருக்கார் சொடுக்கு எடுப்பாங்க
*டீச்சர் முதல் ஸ்டூடண்ட் வரை ஒரு நிமிசம் மறந்தாலும் உலகம் உடனே நீ ஒரு பப்ளிக் எக்ஸாம் product என நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.
*காதுகுத்து வீடு, கோயில் திருவிழா, சிறுவர் பூங்காக்களில் இனி அஞ்சாவது பசங்களை பார்க்க முடியாது.
பள்ளி தலமனைத்தும் பப்ளிக் எக்ஸாம் சென்டர் ஆக்குவோம.