ஐக்கிய நாடுகள் சபையின் மாணவப் பிரதிநிதிகளாக. தமிழக மாணவிகள் நியமனம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஐக்கிய நாடுகள் சபையின் மாணவப் பிரதிநிதிகளாக. தமிழக மாணவிகள் நியமனம்




ராமநாதபுரம்: ராமநாதபுரம் முகமது தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி கல்லுாரி மாணவி அப்ரின் வஜிஹா, செய்யதம்மாள் கல்லுாரி மாணவி மகேஸ்வரி ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் மாணவப் பிரதிநிதிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.
நேருயுவகேந்திரா சார்பில் மாவட்டம் தோறும் கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு முதன் முறையாக விளையாட்டு, மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் தேசிய அளவில் மாணவர்களை தேர்வு செய்து டெல்லியில் இளையோர் பராராளுமன்ற நிகழ்ச்சி நடத்தினர். இதில் நாடு முழுவதும் இருந்து 80 மாணவர்கள் தேர்வு பெற்றனர்.இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவி அப்ரின் வஜிஹா, செய்யதம்மாள் கல்லுாரி மாணவி மகேஸ்வரி தேர்வு பெற்றனர்.
இதில் அப்ரின் வஜிஹா சுகாதாரம் குறித்து டெல்லி இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சியில் பேசினார்.
இவரை கல்லுாரி தாளாளர் முகமது யூசுப், முதல்வர் சோமசுந்தரம், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் நோவான் அக்ரம், எஸ்.எஸ்.ஏ., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர்.
நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் நோவான் அக்ரம் கூறுகையில், வளர்ந்து வரும் மாவட்டங்களில் ராமநாதபுரம் உள்ளது. தமிழக அளவில் ராமநாதபுரம் மாணவிகள் இருவர் இளையோர் பராளுமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இருவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மாணவ பிரதிநிதிகளாக நியமிக்கப்படவுள்ளனர்,”

Subscribe Here