ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு சுற்றறிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு சுற்றறிக்கை




ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியிருந்தார்கள். பஞ்சாபை சேர்ந்த அரசு ஒப்பந்த ஊழியர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் நிரந்தர ஊழியர்களுக்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வெவ்வேறாக உள்ளது. மேலும் எங்களுக்கு எந்த சலுகையும் கிடைப்பதில்லை. அதேபோல மிக பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரே வேலை செய்யும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இது தொடர்பாக, கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வந்த மத்திய அரசு தற்போது அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, 2 தினங்களுக்கு முன்பாக அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தற்காலிக பணியாளர்களுக்கும் நிரந்தர ஊழியருக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பஞ்சப்படி வழங்க அறிவுறுத்தியுள்ளது. தொடர்ச்சியாக இருக்கும் பணிகளுக்கு தினசரி ஊதிய அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் மற்றொரு தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, நிரந்தர தொழிலாளர்களின் பணிகளுக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்படமாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களின் பணியை ஒப்பந்த தொழிலாளர்களாக செய்து வருகின்றனர். இனி அந்த பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடரமாட்டார்கள் என்பதை தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் 1,000-க்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக, வாகன ஓட்டுநர் போன்ற சிறிய துறை சார்ந்த இடங்களில் அதிகம் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பால் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரே ஊதியம் என உத்தரவிட்டுள்ளது ஒருபுறம் நன்மையாக இருந்தாலும், இதனால் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் இந்த சுற்றறிக்கை மிகுந்த குழப்பமும், பல குளறுபடிகளும் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது.

Subscribe Here