மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும் நாளையும்  கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும் நாளையும்  கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்




மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும் நாளையும்  கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தமிழகம் நோக்கி நகர்வதால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும், 25 ஆம் தேதி கடலோர மற்றும் தென்மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டதுடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல், தென் தமிழக கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வலிமையான காற்று வீசும் என்பதால், மீனவர்கள் 2 நாள்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது

Subscribe Here