10 ஆம் வகுப்பு தகுதிக்கு தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

10 ஆம் வகுப்பு தகுதிக்கு தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு


தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போத…
(Southern Railway ) துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு 10ஆம் வகுப்பு படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், எத்தனை பணியிடங்கள் உள்ள என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.



சென்னையில் செயல்பட்டு வரும் தெற்கு ( ) தற்போது லெவல் 1, லெவல் 2 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது சாரணர் (Scouts & Guides) பிரிவுக்கானது ஆகும். தெற்கு ரயில்வே எனும் போது சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் உள்ளிட்ட கோட்டங்கள் அடங்கியது.
காலியிடங்கள்:

Scouts & Guides Level – 2: பிரிவுக்கு இரண்டு பணியிடங்களும் Level 1 பிரிவுக்கு மொத்தம் 12 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் லெவல் 1 பிரிவுக்கு சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் என ஒவ்வொன்றிலும் இரண்டு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சாரணர் இயக்கத்தில் Scouts & Guides குறைந்தது5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்வு முறை:

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கும், சாரணரில் 40 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வில் என்னென்ன பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:Level 2 – Non Technical: லெவல் 2 வில் தொழில்நுட்பம் அல்லாத பணிக்கு (NTPC) பத்தாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களாக இருந்தால், அவர்களுக்கு இந்த குறைந்தபட்ச கல்வித்தகுதி தேவையில்லை.
Level 2 Technical: லெவல் 2 டெக்னிக்கல் பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
Level 1 : லெவல் 1 பணிகளுக்குக் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:லெவல் 1 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஓபசி பிரிவினராக இருந்தால் 36 வயது வரையிலும், SC/ST பிரிவினராக இருந்தால், 38 வயது வரையிலும் இருக்கலாம்.
லெவல் 2 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 30 வயது வரையிலும், ஓபிசி பிரிவினர் 18 முதல் 33 வயது வரையிலும், SC/STபிரிவினர் 18 முதல் 38 வயது வரையிலும் இருக்கலாம்.மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர், ஏற்கனவேபணியில் உள்ளவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தைப் போட்டோ, கல்விச்சான்றிதழ் ஆகியவற்றுடன் இணைத்து அஞ்சல் வழியாக வரும் நவம்பர் 18 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

THE CHAIRMAN, Railway Recruitment Cell, Southern Railway, III Floor, No.5, Dr. P.V. Cherian Crescent Road, Egmore, Chennai – 600 008.
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தெற்கு ரயில்வே தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

Subscribe Here