****************
பதவி உயர்வுக்கு தேர்வு எழுதிய 119 நீதிபதிகளும் தோல்வி.
——————————————————————————
குஜராத் மாநிலத்தில், மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வை எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத அவலம் அரங்கேறியுள்ளது.இதில் விஷேசம் என்னவென்றால், தேர்வை எழுதியவர்களில் 119 பேர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளாக, நீதித்துறை அதிகாரிகளாக ஏற்கெனவே பணியாற்றி வருபவர்கள் என்பதுதான்.
இவர்கள் தவிர ஆயிரத்து 372 வழக்கறிஞர்களும் தேர்வை எழுதி தோல்வி அடைந்துள்ளனர்.குஜராத் மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 40 நீதிபதி பணியிடங்கள் காலியாகஉள்ளன. விதிமுறைகளின்படி, மொத்த காலிப் பணியிடங்களில் 65 சதவிகித இடங்கள்,மூத்த உரிமையியல் நீதிபதிகளைக் கொண்டும், 25 சதவிகிதம் வழக்கறிஞர்கள் மூலமாகவும், 10 சதவிகிதம் மாவட்ட கூடுதல் நீதிபதிகளில் இருந்தும் நிரப்பப்பட வேண்டும். இதன்படி கடந்த ஜுன், ஆகஸ்ட் மாதங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இறுதியாக 494 வழக்கறிஞர்களும் 119 நீதிபதிகளும் களத்தில் இருந்தனர்.இந்நிலையில், கடந்த வாரம் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நீதிபதிகள் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சிபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Theekkathir.