சந்திரயான்-2 தொடர்பாக தனக்கு கடிதம் எழுதிய நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஊட்டி:
‘இஸ்ரோ’ விண்வெளி மையம் கடந்த செப்டம்பர் மாதம் சந்திரயான்-2 விண்கலத்தை நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பியது. தரையிறங்க 2½ கி.மீட்டர் தூரத்தில் இருந்தபோது லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
உலகமே ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் முக்கட்டி அரசு பள்ளி மாணவர்கள் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு செப்டம்பர் 10-ந்தேதி ஒரு கடிதம் எழுதினர். அதில் அறிவியல் ஆய்வுகளுக்கு தோல்வி என்பதே இல்லை என்று கூறியிருந்தனர்.
இதற்கு சிவன் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
இதுபோன்ற அன்பாலும், ஆதரவாளும் நம் இந்திய விண்வெளித்துறை மென்மேலும் சாதனைகள் படைக்கும். சந்திரயான்-2 லேண்டர் தரை இறங்காமல் இருந்தாலும் ஆர்பிட்டர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் கருவிகள் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும். மாணவர்களின் லட்சிய ஆசைகள் நிறைவேற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
தமிழில் எழுதி கையெழுத்திட்டுள்ள அவரின் கடிதத்தின் பிரதிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அனைவரையும் ஆசிரியர்கள் படிக்க செய்தனர். தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் கூறும்போது, உலக தபால் தினத்தில் நாட்டின் சிறந்த மனிதரிடம் இருந்து வந்த கடிதம் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, எங்கள் ஆறுதலையும், ஆசையையும் தெரிவித்தோம். இஸ்ரோ தலைவர் எங்களுக்கு பதில் கடிதம் எழுதியது மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் அளிக்கிறது என்றனர்.