இன்றையதிருக்குறள்
குறள் : 877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.
விளக்கம் :
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.
குறள் விளக்க கதை :
சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.
தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.
ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். இந்த ஒரு குத்து போதும் உனக்கு என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் அவர்கள் நினைத்ததுதான் தவறு. வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். சிறுவனுக்கும், அங்கிருந்த எல்லோருக்கும் ஆச்சர்யம்.
எப்படி குருவே என்னால் ஒரு கையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது? என்று கேட்டான்.
குரு சொன்னார், இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை. குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.
நீதி :
தன்னிடம் உள்ள குறையை மற்றவர்களிடம் வெளிப்படுத்தக் கூடாது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
நாம் எப்படி வரவேண்டும் என்று இன்று நினைக்கிறோமோ, அதன்படியே நாளை உருவாகி விடுவோம் என்ற உறுதியான சிந்தனைக்கு ஏற்ப நம்பிக்கையுடன் சிந்திக்க வேண்டும்.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
பழமொழி மற்றும் விளக்கம்
குருவிக்கு தக்கன ராமேஸ்வரம்.
விளக்கம் :
நம்முடைய தகுதிக்கும் வசதிக்கும் தகுந்ததுதான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இருந்து பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம். குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்மந்தம். குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று மாறிப்போனது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1.குடும்ப விளக்கு எனும் நூலின் ஆசிரியர் யார்?
பாவேந்தர் பாரதிதாசன்
2. மைனா பறவைகளின் தாயகம் எது ?
இந்தியா
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1. யாரும் ஏற முடியாத மரம்; கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்?
வாழை மரம்
2.. விழுந்தால் படுக்காது; எழுந்தால் நிற்காது. அது என்ன?
தலையாட்டி பொம்மை
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
தக்காளி
🍅 தக்காளி செடியினத்தைச் சேர்ந்த தாவரமாகும்.
🍅 தக்காளி சமையலில் பழமாக பயன்படுகிறது.
🍅தக்காளியின் பிறப்பிடம் அமெரிக்க கண்டம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்தக் கண்டத்தில் 16-ம் நூற்றாண்டில் உணவுக்காக தக்காளி பயன்படுத்தப் பட்டிருக்கும் விஷயம் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது.
🍅இந்தியாவில் ஆந்திரா, பீகார், கர்நாடகா,ஒரிசா போன்ற மாநிலங்களில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் உடன்பாட்டை இறுதி செய்ய ஜனவரி 31ம் தேதி வரை அவகாசம்.
🔮ஜம்மு - காஷ்மீரில் பொதுமக்கள் மீது பாக். தாக்குதல் நடத்துவது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு தோவல் விளக்கம்.
🔮ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்.
🔮நாடு முழுவதும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உடனடியாக மூடுவதற்கு மத்திய குழந்தை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
🔮சென்னையில் தீபாவளியை ஒட்டி கடந்த 2 நாட்களாக காற்று மாசின் அளவு 198 பி.எம். ஆக உள்ளது.
HEADLINES
🔮TN borewell horror: Parallel hole now 50-feet deep, PM says prayers with 'brave Sujith'.
🔮Govt signals shift, allows European Parliament members to visit Kashmir.
🔮J&K: 20 civilians injured in grenade attack at Sopore.
🔮Keezhadi excavations open age-old debate of Aryans vs Dravidians.