ரூ.47,600 சம்பளத்தில் நீதிமன்றத்தில் பணி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ரூ.47,600 சம்பளத்தில் நீதிமன்றத்தில் பணி





நமது நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 58 மூத்த மற்றும் தனிநபர் உதவியாளர் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 58
பணியிடம்: தில்லி 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Personal Assistant (SPA)
காலியிடங்கள்: 35
தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் எழுதும் திறனும், கணினியை செயல்படுத்தும் திறனுடன் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.  
பணி அனுபவம்: 2 ஆண்டு சுருக்கெழுத்து கிரேடு-டி அல்லது சுருக்கெழுத்தை தட்டச்சு செய்பவராக சமமான தரத்தில் அல்லது உயர் தரத்தில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.47,600 வழங்கப்படும். 
பணி: Personal Assistant (PA)
காலியிடங்கள்: 23
தகுதி: எதாவெதாரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறனும், கணினியை செயல்படுத்தும் திறனுடன் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து தேர்வு, கணினியில் தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:www.sci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறியஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2019

Subscribe Here