தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி




தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அர்ஜுன் கோபால், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
பட்டாசு வெடிக்க தடையில்லை என்ற அதிரடி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம் பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதித்தது. இந்த நிபந்தனைகளில் சீர்திருத்தம் செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்றும், எந்த 2 மணி நேரம் என்பதை அரசு முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு செய்கிறது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது. மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டு ஸ்தலங்கள், பள்ளி, நீதிமன்றம், குடிசை பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. 

Subscribe Here