மாணவனை பிளேடால் கீறிய சக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு மறவப்பட்டி காலனியை சேர்ந்தவர் ராமு – ராசாத்தி தம்பதியினர். இவர்களது மகனான சரவணகுமார் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளி முடியும்போது சரவணகுமாரின் சக நண்பரான மோகன்ராஜின் புத்தகப்பையை இவர்களுடன் படிக்கும் மாற்று சாதி வகுப்பை சேர்ந்த மாணவன் மகா ஈஸ்வரன் மறைத்து வைத்துக் கொண்டு தேட வைத்துள்ளார்.
பின்னர் சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் நீண்ட நேரமாக தேடியதில் புத்தகப்பை பள்ளிக்கு அருகே இருந்த முட்புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்து. அதனை எடுத்துவந்த சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ், ஆத்திரத்தில் மகா ஈஸ்வரனிடம் தட்டிகேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன் பட்டியலின மாணவன் சரவணகுமாரை ஜாதியின் பெயரை கூறியபடி தனது கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் முதுகில் கீறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன் பட்டியலின மாணவன் சரவணகுமாரை ஜாதியின் பெயரை கூறியபடி தனது கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் முதுகில் கீறியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சரவணகுமாரை, சக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மாணவன் சரவணகுமாருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பிளேடால் சக மாணவனை தாக்கிய மகா ஈஸ்வரன் மீது எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாமல் மாணவன் தரையில் படுத்தபடி சிகிச்சை பெறுவது மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. மாணவனுக்கு வரும் 20-ம் தேதி காதணி விழா நடைபெற உள்ள நிலையில் மாணவனுக்கு நேர்ந்த இந்த சம்பவம் அவரது பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜானிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பள்ளி வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற பிரச்னை எனவும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.