மதுரையைச் சேர்ந்த சிறுமி ராசிகா மலேசியாவில் நடந்த உலகளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார். இவரது சகோதரர் கிஷோர் இரண்டாம் பரிசு வென்றுள்ளார்.
ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தற்போது ஆர்வத்துடன் இந்தக் கலையை கற்று வருகின்றனர். பெண்களுக்கு தற்காப்புக் கலையாகவும் அமைந்துவிடுகிறது. ஆதலால் பள்ளிகளே முன் வந்து இந்தக் கலையை கற்றுத் தருகிறது.
மதுரையைச் சேர்ந்த சிறுமி ராசிகா சிலம்பக் கலையில் சிறந்து விளங்கினார். மலேசியாவில் நடந்த உலகளவிலான போட்டியில் கடந்த மாதம் முதல் பரிசு பெற்றார்.
வீட்டுக்கு தினமும் காலை சிலம்ப ஆசிரியர் வந்திருந்து ராசிகா, அவரது சகோதரர் கிஷோருக்கு பயிற்சி அளிக்கிறார்.
இவர்களது தந்தை நவநீத கிருஷ்ணன் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் ஈட்டும் சொற்ப வருமானத்திலும் தங்களது குழந்தைகளுக்கு சிறந்த சிலம்ப பயிற்சிகளை அளித்து வருகிறார். சிலம்பக் கலையில் ஆர்வம் கொண்டு இருக்கும் நவநீத கிருஷ்ணன் பலரும் இந்தக் கலையைக் கற்று சிறந்து விளங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.