அரசு மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் - தமிழக சுகாதாரத் துறை உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசு மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் - தமிழக சுகாதாரத் துறை உத்தரவு




doctors strike

சென்னை: தொடர்ந்து 6வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 6வது நாளை எட்டியுள்ள நிலையில், அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, மருத்துவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு வேளை பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசு மருத்துவர்கள் பணி மூப்பை இழப்பார்கள்.
அதேப்போல, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சிக்குத் திரும்பத் தவறினால், நன்னடத்தை சான்று கிடையாது எனவும் மருத்துவக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

Subscribe Here