பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.11.19 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.11.19





திருக்குறள்
அதிகாரம்:இன்னா செய்யாமை
திருக்குறள்:317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
விளக்கம்:
எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.
பழமொழி
Distance lends enchantment  to the view.
தூரத்துப் பச்சை தான்  கண்ணுக்கு அழகு.
இரண்டொழுக்க பண்புகள்
1. சோம்பல் என்னை வறுமைக்கு வழிநடத்தும்.
2. எனவே தேனீ போலும், எறும்பு போலும் சுறுசுறுப்பாக இருப்பேன்.
பொன்மொழி
இந்த உலகத்தில் அன்பு தான் எல்லாவற்றையும் அள்கிறது. அன்பை கொடுத்து இன்பத்தைப் பெறுங்கள்.
-----ஆதிசங்கரர்



பொது அறிவு
1. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாராலிம்பிக் போட்டி.
2. மனவளர்ச்சி குன்றியோருக்கான ஒலிம்பிக் போட்டி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்பெஷல் ஒலிம்பிக்.
English words & meanings
• Dermatology – study of skin. தோல் மருத்துவம். இது மனித உடலின்  தோலினைப்  பற்றிய மருத்துவத்தின் ஒரு பிரிவு ஆகும். முடி, நகங்கள், தோல் மற்றும் இவற்றினைப் பாதிக்கும் நோய்கள் பற்றிய படிப்பு ஆகும்.
• Dabble - immerse partially in water and play like a child. சிறு பிள்ளை போல் நீரில் அளைந்து விளையாடுதல்.
ஆரோக்ய வாழ்வு
கருப்பு டீயில் ஃப்ளுரைடு இருப்பதால்  பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.



Some important  abbreviations for students
RC - root canal
Rx - prescription
நீதிக்கதை
யானையின் திறமை
ஒரு காட்டில் யானை ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் அந்த காட்டில் நண்பர்களை தேடிச் சென்றது. யானை முதலில் மரத்தில் ஒரு குரங்கை பார்த்தது. அந்த குரங்கிடம் சென்று நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த குரங்கு நீ பெரிய உடம்பினைக் கொண்டுள்ளாய். அதனால் என்னை போல் உன்னால் மரத்திற்கு மரம் தாவ முடியாது. ஆகவே உன்னை நண்பனாக ஏற்று கொள்ள முடியாது என்று குரங்கு சொன்னது.
அடுத்ததாக யானை, முயல் ஒன்றை பார்த்தது. அந்த முயலிடம் சென்று என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த முயல் நீ பெரிய உடம்பினை கொண்டுள்ளாய் அதனால் உன்னால் என்னை போல் வேகமாக ஓடமுடியாது என்று சொன்னது. அடுத்ததாக யானை, தவளை ஒன்றை பார்த்தது. அந்த தவளையிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்று கொள்வாயா என்று கேட்டது. அதற்கு தவளை என்னை போல் உன்னால் தாவ முடியாது. ஆதலால் உன்னை என் நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.
கடைசியாக யானை, நரி ஒன்றை பார்த்தது. அதனிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. நரியும் நீ உடம்பளவில் பெரியவனாக உள்ளாய். ஆதலால் உன்னை நண்பனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது. யானை கவலையில் தனது இடத்திற்குச் சென்றது.
அடுத்த நாள் காலையில் விலங்குகளின் சத்தம் கேட்டு அங்கு ஓடி கொண்டிருந்த கரடியிடம் ஏன் ஓடுகிறீர்கள்? என்று யானை கேட்டது.


அதற்க்கு கரடி இங்கு உள்ள விலங்குகளை ஒன்று ஒன்றாக புலி கொன்று சாப்பிட்டு வருகிறது. அதனால்தான் நாங்கள் ஓடுகிறோம் என்று சொல்லி கொண்டே ஓடியது.
யானை இதற்கு ஒரு வழி கொண்டு வரணும் என்று நினைத்து புலியிடம் சென்றது. புலியை பார்த்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டது. அதற்கு அந்த புலி, இது உனக்கு தேவையில்லாத விஷயம் என்று சொன்னது. யானை அதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் அதனை தனது காலால் உதைத்து தள்ளியது. காயத்துடன் அந்த புலி அந்த காட்டை விட்டு தலை தெரிக்க ஓடியது.
இதனை கண்ட அங்கு உள்ள விலங்குகள் நீ உடம்பில் பெரியவன் அல்ல நீ இனி எங்கள் நண்பன் என்று சொல்லி யானையை நண்பனாக ஏற்று கொண்டன.
செவ்வாய்
English
What can travel around the world while staying in a corner?
ans: stamp
இன்றைய செய்திகள்
12.11.19
* சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி.சாஹி.
* சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கும் பகுதிநேர எம்.இ., எம்.டெக். பட்டம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



* சென்னை -யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை நேற்று  தொடங்கியது.
* இந்தியாவின் இளம் வீரரான சவுரப் சவுத்ரி 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் 244.5 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
* வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Today's Headlines
🌸A .P .Sahi became the 49th Chief Justice of the Madras High Court.
🌸 Part-time M.E., M.Tech offered by Sathyabama University will be valid announced by the university.
🌸Chennai-yazhpaanam daily flight commenced  from yesterday.
🌸 Sourabh Choudhury, the youngest player in India, won the silver medal in the 10-meter air pistol with 244.5 points.



🌸 India's women cricketer won the T20 cricket match against the West Indies by 10 wickets.
Prepared by
Covai women ICT_போதிமரம்

Subscribe Here