ரூபிக் கியூப் புதிரை 2 நிமிடம் 7 விநாடிகளில் ஒழுங்குபடுத்தி சென்னையை சேர்ந்த மாணவி சாதனை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ரூபிக் கியூப் புதிரை 2 நிமிடம் 7 விநாடிகளில் ஒழுங்குபடுத்தி சென்னையை சேர்ந்த மாணவி சாதனை



பல்வேறு நிறங்களை கொண்ட கன சதுர கட்டங்களை உள்ளடக்கிய ரூபிக் கியூப் புதிரை 2 நிமிடம் 7 விநாடிகளில் ஒழுங்குபடுத்தி சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.
சென்னை:
பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய கன சதுர கட்டங்களை ஒரு சேர ஒழுங்குபடுத்தும் விளையாட்டு ரூபிக் கியூப் எனப்படுகிறது.
இந்த விளையாட்டில் மாறி மாறி உள்ள புதினங்களை வேகமாக ஒழுங்குபடுத்துவதில் உலகின் பல்வேறு நாடு சேர்ந்த அனைத்து வயது தரப்பினரும் கின்னஸ் உள்பட பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் 6 வயது நிரம்பிய ஒரு சிறுமி சாரா ரூபிக் கியூப் போட்டியில் கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளார். கொடுக்கப்பட்ட ரூபிக் கியூப் புதினங்களை 2 நிமிடம் 7 விநாடிகளில் ஒழுங்குபடுத்தி இந்த சாதனையை சிறுமி நிகழ்த்தியுள்ளார்.
அதிவேகமாக புதினங்களை ஒழுங்குபடுத்தி சாதனை படைத்த சிறுமி சாராவுக்கு முன்னதாக தமிழ்நாடு கியூப் அமைப்பின் சார்பில் ’உலகின் இளைய மேதை’  என்ற பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe Here