தற்கொலை செய்துகொண்ட ஐஐடி மாணவியின் தந்தையிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மணி நேரம் விசா ரணை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தற்கொலை செய்துகொண்ட ஐஐடி மாணவியின் தந்தையிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மணி நேரம் விசா ரணை


சென்னை
தற்கொலை செய்துகொண்ட ஐஐடி மாணவியின் தந்தையிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மணி நேரம் விசா ரணை நடத்தினர்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (20). இவர் சென்னை ஐஐடியில் முதலாண்டு எம்.ஏ. மானுடவியல் படித்து வந்தார். கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். இவர் கடந்த 8-ம் தேதி இரவு தனது அறைக்குள் மின்விசிறியில் தூக் கிட்டு தற்கொலை செய்துகொண் டார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் நேற்று முன்தினம் சென்னை வந்து, முதல்வர் பழனிசாமி, டிஜிபி திரிபாதி ஆகியோரை சந்தித்து, முறைப்படி விசாரணை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள இல்லத்தில் அப்துல் லத்தீப் தங்கி யிருக்கிறார்
.இந்நிலையில், கேரள இல்லத் துக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, விசாரணை அதிகாரி யும், கூடுதல் துணை ஆணையரு மான மெகலீனா ஆகியோர் நேற்று சென்று, அப்துல் லத்தீப்பிடம் விசாரணை நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய விசாரணை பிற்பகல் 11 மணி வரை நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் அப்துல் லத்தீப் கூறியதாவது:
அதிகாரிகள் கேட்ட அனைத்து தகவல்களையும் தெரிவித்துள் ளேன். பாத்திமா தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய 28 நாட்களுக்கான டைரி குறிப்புகள், கல்லூரி விடுதியில் பாத்திமா உடலை முதலில் பார்த்த நபர் எங்களிடம் போனில் பேசிய ஆடியோ பதிவையும் விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன். பாத்திமா பயன்படுத்திய கணினி, டேப்லட் ஆகியவற்றை போலீஸார் கேட்டுள்ளனர்.
பாத்திமாவின் தங் கையிடமும் அதிகாரிகள் விசா ரணை நடத்த உள்ளனர். விசாரணை முடியும் வரை சென்னையில் தங்க உள்ளேன்.
‘குற்றவாளிகள் எவ்வளவு உயர் நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் உறுதி அளித் துள்ளனர். இனி ஒரு பெண் பிள்ளைக்கு இந்த தேசத்தில் இது போன்ற சம்பவம் நடக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
காவல் ஆணையருடன் சந்திப்பு
பின்னர், சென்னை வேப்பேரி யில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்த லத்தீப், அவரிடம் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், ‘‘என் பேச்சை காவல் ஆணையர் முழுமை யாக கேட்டார்.
பாத்திமாவை தமிழக பெண்ணாக கருதியே விசா ரணை நடத்தி வருவதாக கூறி னார்’’ என்றார்.
அமைச்சர் உறுதி
இதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று கூறும்போது, “தமிழக முதல்வரை யும், டிஜிபியையும் மாணவியின் பெற்றோர் சந்தித்தனர். தமிழக அரசு மீதும், காவல் துறை மீதும் நம்பிக்கை இருப்பதாக அவர் களே தெரிவித்துள்ளனர். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் காவல் துறையின் கடமை. அதை இந்த அரசு நிச்சயமாக செய்யும்’’ என்றார்.

Subscribe Here