அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோட்டை நோக்கி பேரணியாக சென்றனர்
.
சென்னை வாலாஜா சாலையில் தொடங்கிய இந்த பேரணியில் பதாகைகளை கையில் ஏந்தியபடி இரண்டாயிரத்திக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இதில், அவுட்சோர்சிங் மூலம் வேலைக்கு ஆட்களை சேர்க்க அனுமதிக்கும் அரசாணை 56ஐ நீக்க வேண்டும்,
அரசுத்துறையில் காலியாக உள்ள நான்கரை லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி மையம், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகங்களின் பணியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்ப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.