பிஞ்சுகளுக்கு 9 மணிநேர வகுப்பா - பள்ளிக்கு வர பயமுறுத்தும் சிறப்பு வகுப்புக்கான சுற்றறிக்கையினை திரும்ப பெறுக : தமிழ்நாடு அனைத்துஆசிரியர் சங்கம் வேண்டுகோள் ;
மாநில செய்தித்தொடர்பாளர்
பு.செல்வக்குமார்
பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு நடவடிக்கையினால் எதிர்காலத்தில் அரசுபள்ளிகளை மூடும் அபாயம் ஏற்படுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை 8.30க்கு தொடங்கி மாலை 5.20 வரை சிறப்பு வகுப்பு என்ற பெயரில் ஒரு நாளைக்கு 9 மணிநேரம் பள்ளியில் இருந்தால் மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு மனஅழுத்தத்தால் மனநிலை பாதிக்கும் தரமானக்கல்வித் தருவதாக நினைத்து பிஞ்சுக்குழந்தைகளுக்கு தேவைக்கு அதிகமான சுமையினை ஏற்றி கரும்பு சக்கையாகப் பிழியும் போக்கினை கைவிடவும்.
குழந்தைகள் ஆர்வத்தோடு பள்ளிக்குவர வழைக்க வேண்டுமே தவிர பள்ளியினைப் பார்த்தால் பயந்தோடச் செய்யக்கூடாது.
மெல்லக்கற்கும் குழந்தைகளை அவரவர் மனநிலைக்கேற்ப பாடத்தினை உருவாக்க வேண்டுமே தவிர ஒரே நாளில் திணிக்கும் முயற்சி பலனளிக்காது. மாறாக பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.குழந்தைகளுக்கு பாடம் தயாரிக்கும் போதே அவர்களுக்கு எது பிடிக்குமோ அதனையறிந்தும் சிறந்த உளவியல் ஆலோசர்களிடம் ஆலோசனைப் பெற்றப்பிறகே பாடப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். தரமானகல்வி அளிக்கவேண்டுமென்பதற்காக விளையாட்டுப் பொம்மைகளுடன் விளையாடும் குழந்தைகளுக்கு போட்டித்தேர்வுக்காக பழக்கப்படுத்துகிறேன் என்று பிஞ்சுகளின் கனவுகளுக்கு கடிவாளம் போடக்கூடாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அதிலும் வேறுபள்ளிக்கு சென்று தேர்வு எழுதவேண்டும் என்ற அறிவிப்பால் பெற்றோர்கள் பயத்தால் குழந்தைகளின் சின்னசின்ன சந்தோசங்களை பறிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்நிலையில் 9 மணி நேரம் பள்ளிக்கூடம் என்றால் குழந்தைகள் பள்ளிக்கு வருவதே கேள்விக்குறியாகும்.
தொழிலாளிக்கு கூட 8 மணிநேர வேலைதான் இங்கு குழந்தைகளுக்கு 9 மணிநேர கல்வியா அதிலும் தினந்தோறும் 25 மதிப்பெண்களுக்கு தேர்வா பிஞ்சுகள் பிஞ்சுப்போயிடும். எதிர்காலத்தில் அரசுபள்ளிகள் எங்கு உள்ளது என்ற நிலை உருவாகும். தமிழ்நாடு படிப்பறிவில் பின்னடைவு ஏற்படும் என்பதால் அரசுப்பள்ளிகளைக் காப்பாற்றிடவும் குழந்தைகளின் மனநிலையினைக் கருத்தில்கொண்டும் 9 மணி நேரப்பள்ளிக்கூடமாக மாற்றும் 5 முதல் 8 ஆம் வகுப்புக்கு சிறப்புவகுப்புகளுக்கான முடிவினை மறுபரிசீலனை செய்யும்படி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பு.செல்வக்குமார்,
மாநில செய்தித்தொடர்பாளர்,
TATA.