நிலவில் ஆர்கான் 40 வாயு கண்டுபிடிப்பு - சந்திராயன் 2 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நிலவில் ஆர்கான் 40 வாயு கண்டுபிடிப்பு - சந்திராயன் 2





இந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான்-2 விண்கலமானது பூமியின் சுற்று வட்டப்பாதையை 23 நாள்களுக்குச் சுற்றிய பின் ஆகஸ்ட் 14 அன்று நிலவிற்கான தன் பயணத்தைத் தொடங்கியது. செப்டம்பர் 2-ம் தேதி விக்ரம் லேண்டர், திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க சந்திரயான் -2 ஆர்பிட்டரிலிருந்து பிரிந்து சென்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரானது செப்டம்பர் 7 அன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்கும்போது பூமியிலிருந்த கண்காணிப்பு அறையுடனான தொடர்பை இழந்து போனது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்து விக்ரம் லேண்டருக்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை என்று தெரிவித்தது .



இந்நிலையில் இஸ்ரோ அமைப்பு கடந்த வியாழக்கிழமை அன்று “நிலவின் புறக்காற்று மண்டலத்தில் (lunar exosphere) ஆர்கான் 40 வாயுவின் மூலக்கூறுகள் இருப்பதை சந்திரயான் -2 விண்கலத்தின் சேஸ் 2 (CHASE 2 payload) உறுதிப்படுத்தியிருக்கிறது” எனத் தெரிவித்தது.
Also Read:
மேலும், சேஸ்-2 பேலோடுடன் சந்திரனைச் சுற்றிவரும் சந்திரயான் 2 ஆர்பிட்டரானது, 100அடி உயரத்தில் ஆர்கான் 40 வாயு இருப்பதைக் கண்டறிந்துள்ளது என இஸ்ரோ தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறது. ஆர்கான் 40 வாயு அரிதாகக் கிடைக்கப்பெறும் வாயுவாகும். ஆர்கான் 40 வாயுவானது பொட்டாசியம் 40-ன் கதிரியக்கச் சிதைவின்(radioactive disintegration) மூலம் உருவாகிறது. நிலவின் ஆழ் பகுதிகளில் உள்ள கதிரியக்க பொட்டாசியமானது சிதைவின் மூலம் ஆர்கான 40 வாயுவாக உருமாறி நிலவின் புறக்காற்று மண்டலத்தை அடைகிறது .


நிலவில் ஆர்கான் 40-வாயு

நியூட்ரல் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டரான (neutral mass spectrometer) சேஸ் 2, இரவு மற்றும் பகல் நேரங்களில் ஆர்கான் 40 வாயுவில் ஏற்படும் மாற்றங்களையும் கண்காணித்துள்ளது. நிலவில் நிலவும் தட்பவெப்பச் சூழல் காரணங்களால் இரவில் ஆர்கான் 40 வாயு உறைந்து விடுகிறது. பிறகு பகலில் ஆவியாகி ஆர்கான் வாயுவின் அளவு நிலவின் புறக்காற்று மண்டலத்தில் அதிகரித்து விடுகிறது எனவும் கண்டறிந்துள்ளது .
Also Read:
கடந்த மாதம் இஸ்ரோ, சந்திரயான் 2 ஆர்பிட்டரில் உள்ள OHRC (Orbitor Hi-Resolution Camera) என்னும் கேமரா மூலம் நிலவில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டது. நிலவின் தென் துருவத்திற்குச் செல்ல முடியாமல் போனாலும் சந்திரயான் ஆர்பிட்டர் மூலமான செயல்பாடுகள் மூலம் தொடர்ந்து நிலவை ஆய்வு செய்துவருகிறது. இதன்மூலம் சந்திரயான்-2 தோல்வித்திட்டம் அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துகாட்டியிருக்கிறது இஸ்ரோ.


Subscribe Here