குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவி ஒருவருக்கு பள்ளியின் தலைமையாசிரியை பொறுப்பு இன்று ஒருநாள் மட்டும் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட கூடலூர் அருகேயுள்ள முக்கட்டி பகுதியில் அரசுப் பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் மற்றும் இதர மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் தினமான இன்று,
பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அப்பள்ளியில் பயிலும் தர்ஷினி என்ற மாணவி ஒருநாள் தலைமை ஆசிரியராக அறிவிக்கப்பட்டார்.
பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அப்பள்ளியில் பயிலும் தர்ஷினி என்ற மாணவி ஒருநாள் தலைமை ஆசிரியராக அறிவிக்கப்பட்டார்.
ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருநாள் தலைமை ஆசிரியராக அறிவிக்கப்பட்ட மாணவியை, தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தனர். தலைமை ஆசிரியரான மாணவி முன்பு அமர்ந்த ஆசிரியர்கள் முன்பாக தங்களது குறைகள் மற்றும் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தனர். அவரது கருத்துக்களை கேட்ட தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவி, கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.