அடாது மழை பெய்தாலும், விடாது நம்முடைய வேலைகளை கவனிக்க வேண்டியுள்ளது.
எனவே மழையினால் ஏற்படும் காய்ச்சல், சளி பிடித்தல் போன்றவை நம்மைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள சில டிப்ஸ்.மழைக்காலங்களில் உணவினை சூடாக உண்பது நலம். மாலை வேளையில் சூப் குடிக்கலாம்.
தினமும் பாலில் மஞ்சள் பொடியும், மிளகுப் பொடியும் சேர்த்து பருகலாம்.
மழைக் காலங்களில் மிதமான சூட்டில் குளிக்கவும், குடிக்கவும் செய்தல் அவசியம்.
– கிரிஜா ராகவன்