உடல் எடையை குறைத்து, செல்போனுக்கு சார்ஜ் செய்ய்யும் கருவி - மாணவி அசத்தல்... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உடல் எடையை குறைத்து, செல்போனுக்கு சார்ஜ் செய்ய்யும் கருவி - மாணவி அசத்தல்...





உடல் எடையை குறைப்பதோடு, செல்போனுக்கு சார்ஜ் போடும் வெறும் ரூ 900 மதிப்பிலான எடையை குறைக்கும் சைக்கிள் - பயோ மெட்ரிக்முறையில் ஒருமாற்றம் என்று அசத்திய மாணவி, மாணவர்கள் - கரூரில் பங்கேற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் அசத்தலான புராஜெக்ட்கள் இடம் பெற்றன. கரூரில் நடைபெற்ற 47 வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல், கணித ,சுற்றுச்சூழல் கண்காட்சியினை கடந்த 3 தினங்களாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கண்காட்சியினை பார்வையிட்டார்கள். கரூரில் 47 வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை கடந்த 31 ம் தேதி பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.



இதில் தமிழகத்தில் இருந்து 32 மாவட்டங்களில் இருந்தும் தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளை சார்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சார்ந்த 182 மாணவர்கள் 146 படைப்புகளை இந்த கண்காட்சியில் காட்சி பொருளாக அறிவியல் படைப்புகளாக வைத்திருந்தனர். இதில் ஆழ்துளை கிணறுகள், சுற்றுச்சூழல், விவசாயம், அறிவியல் ,தண்ணீர் மறு சுழற்சி முறை உள்ளிட்டவை காட்சி படுத்தி இருந்தனர். இதனை அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 11 ஆயிரம் பேர்கள் பார்வையிட்டனர். இதில் தேர்தெடுக்கப்பட்ட படைப்புகள் தென் இந்திய அளவில் நடைபெறும் கண்காட்சியில் பங்கு பெறும். இந்த கண்காட்சியில் தேசிய அளவில் முதல் மூன்று பரிசுகளும், துணை தலைப்புகளில் 21 பரிசுகளும் வழங்கப்பட்டன. தென்னிந்திய அளவில் 50 பேர் இந்த படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும், தென்னிந்திய அளவிலான கண்காட்சி வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் ஏதோ ஒரு பகுதியில் நடைபெறுவதாகவும் பெங்களூரு தேசிய அருங்காட்சியகத்தின் மூத்த கல்வி அலுவலர் பரதன் தெரிவித்தார்.



இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், நந்திவனம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து வந்த 8 ம் வகுப்பு மாணவி முத்துலெட்சுமி என்ற மாணவி, எடையை குறைக்க, ஆங்காங்கே ஜிம் பொருட்களான சைக்கிள் ரூ 20 ஆயிரம் முதல் ரூ 60 ஆயிரம் வரை இருக்கும் நிலையில், ஆங்காங்கே பழுதான சைக்கிள் மற்றும் காயிலாங்கடைக்கு செல்லும் சைக்கிள்களை சேகரித்து அதில் எடையை குறைக்கும் வகையிலும், நூதனமான முறையில், செயல்படுத்தும் வகையில் ஒரு ஜிம் வித பொருட்களை தயார் செய்து அதிலேயே, மின்சாதன பொருட்களை சார்ஜ் செய்யும் வகையில் தயாரித்து அசத்தியுள்ளார். மேலும், இந்த மாணவி 5 ம் இடம் பிடித்து தென்னிந்திய அளவிலான கண்காட்சிக்கு தேர்வு பெற்ற இந்த மாணவியின் அனுபவம் அனைவரையும் கவர்ந்தது. இதே போல், சென்னை கோடம்பாக்கம் பகுதியை சார்ந்த மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் பிரதீப்குமார், பயோ மெட்ரிக் முறையில் முதலிடம் பிடித்துள்ளதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.

Subscribe Here