தினமும் பசங்க எக்சசைஸ் செஞ்சிட்டு தான் கிளாஸுக்கு போகணும் : அமைச்சர் ஸ்ட்ரிக்ட் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தினமும் பசங்க எக்சசைஸ் செஞ்சிட்டு தான் கிளாஸுக்கு போகணும் : அமைச்சர் ஸ்ட்ரிக்ட்



தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், தினமும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும்.

தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும்.

87 people are talking about this
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, விடுமுறை நாட்களில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி ( Skill Training) அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம், மாணவர்களுக்கு பிளஸ் 2 முடித்தவுடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதற்கான பணிகள் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது” என அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, அமைச்சர் திங்கள்கிழமை (நவம்பர் 25) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ” பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் (CA) பணிக்கான பயிற்சி அளிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்காக 500 ஆடிட்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் பயிற்சிக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe Here