என் பரிசுத்தொகையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவேன் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

என் பரிசுத்தொகையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவேன்




விநாடி வினா போட்டியில் தான் வென்ற பரிசுத்தொகையை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட உதவுவேன் எனக் கூறிய பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கட்டாயாவில் உள்ள அரசுப்பள்ளியில் 10வகுப்பு படித்து வரும் மாணவர் தேஜாஸ். அவரது அப்பா ஒரு விவசாயி.
அவரது அம்மா, அரசுப்பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணியாளராக இருக்கிறார். தன் அத்தை வீட்டில் இருந்து படித்து வரும் தேஜாஸ், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விநாடி வினா போட்டியில் பங்கேற்றார். அதில் கேட்கப்பட்ட 15 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு அவர் பதிலளித்து ரூ.6.4 லட்சம் பரிசுத்தொகையை பெற்றார். 
(மாணவர் தேஜாஸ்)
பரிசுத்தொகையை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, ”இந்த பணத்தில் என் அக்காவுக்கு திருமணம் செய்வேன். என் மேல் படிப்புக்கு வைத்துக்கொள்வேன் என்று கூறினார். அதோடு மட்டும் நிறுத்தாமல் என் பள்ளியில் நடும் மரங்களை எல்லாம் கால்நடைகள் தின்றுவிடுகின்றன. மரங்களை காவல் காப்பது கடினமாக இருக்கிறது. அதனால் இந்த பணத்தை வைத்து பள்ளியைச் சுற்றி சுற்றுசுவர் கட்டுவேன்” எனக் கூறினார். மேலும் ”எவ்வளவு செலவாகும் எனத் தெரியாது. ஆனால் ஆசிரியர்கள் எவ்வளவு கேட்டாலும் கொடுப்பேன்” எனவும் தெரிவித்தார். 
தேஜாஸின் இந்த பெருந்தன்மை அனைவரையும் கவர்ந்தது.
இந்த செய்தி கல்வி அமைச்சர் வரை சென்றது. இது குறித்து பேசிய கல்வி அமைச்சர், ‘தேஜாஸுக்கு பாராட்டுகள். அவர் வென்ற பணத்தை அவர் தனது கல்விக்காகவே பயன்படுத்திக் கொள்ளலாம். அரசே உடனடியாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கும்’ என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தேஜாஸ், ‘எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அமைச்சரின் அறிவுரைபடியே நடந்துகொள்வேன். சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Subscribe Here