உடல்தானம் வழங்க பதிவு செய்த ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உடல்தானம் வழங்க பதிவு செய்த ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு*




*உடல்தானம் வழங்க பதிவு செய்த ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_3.html

*_மாவட்ட ஆட்சியர் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் -உடல்தானம் அதிகம் செய்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்_*


*🎙தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உடல்தானம் மற்றும் கண்தானம் பதிவு செய்த ஆசிரியர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.*
                                 
 *⚡ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.*

*⚡பள்ளி தலைமை ஆசிரியர் _திரு.லெ.சொக்கலிங்கம்,_ தேவகோட்டை தாசில்தார் _திரு.மேசியா தாஸ்_ ஆகியோர் முன்னிலை வகித்தார்.*

*⚡சிவகங்கை மாவட்ட ஆட்சியர் _திரு.ஜெ.ஜெயகாந்தன்_ இ.ஆ.ப. தலைமை தாங்கினார்.*

*🎙உடல்தானம் மற்றும் கண்தானம் வழங்க பதிவு செய்துள்ள ஆசிரியர்கள் லெ.சொக்கலிங்கம், புவனேஸ்வரி, முத்துலெட்சுமி ஆகியோருக்கும்,கண்தானம் வழங்க உள்ள ஆசிரியர்கள் கருப்பையா, முத்தமீனாள் ஆகியோருக்கும்   சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.*

_அப்போது அவர் பேசுகையில்,_

*🎙இறந்த பிறகும் உடலையும், கண்களையும் தானம் செய்யும் செயல் மிகப்பெரிய பாராட்டுக்குரியது. அதற்கு தனி மனப்பான்மை வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உடல் மற்றும் கண்தானம் தொடர்பாக பொதுமக்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இப்பள்ளியில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது அருமை. வல்லாரை ஒரு சிறந்த ஞான மூலிகை ஆகும். அது ஞாபக சக்தியை வளர்க்கும். தினமும் 3 முதல் 4 இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இந்த பள்ளியில் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விசயங்களும் ஒருங்கிணைந்து  கற்று தரப்படுகிறது.
இது மிகவும் பாராட்டுக்குரியது ஆகும். மக்களுக்கு சேவை செய்ய எந்நேரமும் நேரடி தொடர்பு உள்ள  பணி  மாவட்ட ஆட்சியர் பணி என்பதால் நீங்களும் பிற்காலத்தில் மாவட்ட ஆட்சியர் பணிக்குவர எனது வாழ்த்துக்கள். உங்களுடன் கலந்துரையாடிய இந்த நாள் எனக்கு மறக்கமுடியாத நாள் ஆகும் என்று பேசினார்.*

*🎙புத்தகம் படித்து சிறப்பான கருத்து சொன்ன மாணவர்கள் நதியா, முத்தய்யன், சிரேகா, ஜனஸ்ரீ, வெங்கட்ராமன் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.*

*🎙மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் அளித்தார்.*

*⚡நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Subscribe Here