டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவகிறது.
விடுதிக் கட்டண உயர்வு, ஆடைக் கட்டுப்பாடுகளை எதிர்த்து கடந்த 20 நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதிக் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி இன்று நாடாளுமன்றம் நோக்கி இன்று பேரணியாக சென்றனர்.
முழக்கங்களை எழுப்பியவாறு சென்ற மாணவ-மாணவிகள் சிறிது தூரத்திலேயே பெர் சாராய் (Ber sarai) சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரும்புத் தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, அதை மீறிச்செல்ல மாணவ-மாணவிகள் முயன்றனர். மாணவர்கள் போராட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.