ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் டீக் கடைகாரர் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் டீக் கடைகாரர்





ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் டீக் கடைகாரருக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் ஷர்தா நகரை சேர்ந்தவர் முகமது மெஹபூப் மாலிக்.
இவர் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். சிறு வயது முதலே படிப்பின் மீது பேரார்வம் கொண்ட மாலிக், குடும்ப வறுமையின் காரணமாக தனது மேற்படிப்பை பாதியிலே நிறுத்திக் கொண்டார். அதன் பின்னர் டீ விற்பதை தனது தொழிலாக்கிக் கொண்டார். சிறிது காலம் டீக்கடை நடத்தி வந்த மாலிக், ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியால் கல்வி பயிலாமல் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டுமென்று முடிவெடுத்தார்.
இதனையடுத்து தெரு ஓரங்களில் குழந்தைகளை அழைத்து பாடங்களை கற்பிக்கத் தொடங்கினார்.
அதன் பின்னர் வாடகைக்கு அறைகளை எடுத்து பாடங்களை குழந்தைகளுக்கு கற்பித்தார். இவரின் நல்லெண்ணத்தை புரிந்து கொண்ட சில தன்னார்வலர்கள், குழந்தைகளுக்கு பாடங்களை கற்பிக்க முன்வந்தனர். இதற்காக தனது டீக்கடையின் மூலம் வந்த வருமானத்தின் பெரும் பகுதியை செலவழித்தார் மாலிக். 
இது மட்டுமல்லாமல் தன்னிடம் படிக்க வரும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், சீருடைகள் முதலிய உபகரணங்களையும் இலவசமாக வழங்கினார். சில நல்ல உள்ளங்களும் மாலிக்குடன் கைகோர்த்தனர்.
மாலிக்கின் தன்னலமற்ற இந்த முயற்சியால் தற்போது 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இலவசமாக அவரிடம் கல்வி பெற்று வருகின்றனர். இதனை அறிந்த பல பிரபலங்கள் அவரை வாழ்த்தினர். 
இதனைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர் லக்‌ஷமணும் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், மாலிக்கை பாராட்டி உள்ளார். அதில் டீக்கடை வருமானத்தில் 80 சதவீதத்தை குழந்தைகளின் கல்விக்காக செலவிடும் மாலிக், அனைவருக்குமான முன்மாதிரி என்று புகழ்ந்துள்ளார்.         

Subscribe Here