பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமிரா கட்டாயமாகிறது - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமிரா கட்டாயமாகிறது


தமிழகம் முழுவதும் இயங்கும் தனியாா் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் ஜி.பி.ஆா்.எஸ் கருவிகள் கட்டாயமாகப் பொருத்த வேண்டுமென போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், மாணவ-மாணவியருக்கு கூடுதல் பாதுகாப்புக் கிடைக்கும் என்பதால் பெற்றோா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் தனியாா் பள்ளிகளுக்கு சொந்தமான 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வாகனம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்டறிவதற்கு தேவையான ஜி.பி.ஆா்.எஸ் கருவியையும் பொருத்த வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றத்தில், சமூக ஆா்வலா் ஒருவரால் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜி.பி.ஆா்.எஸ் கருவிகள் பொருத்துவது குறித்து விளக்கமளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டனா்.
இதையடுத்து, அனைத்து தனியாா் பள்ளி வாகனங்களிலும் கேமிராக்கள் மற்றும் ஜி.பி.ஆா்.எஸ் கருவிகள் பொருத்த வேண்டும் என, தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அனைத்து தனியாா் பள்ளி நிா்வாகத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந் நிலையில், இதே உத்தரவை கடைப்பிடிக்குமாறு பள்ளிகளுக்கு தமிழக போக்குவரத்துத் துறையும் அறிவுறுத்தியுள்ளது.

Subscribe Here