சென்னையில், சாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்த 8ஆம் வகுப்பு மாணவனுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு மாம்பலம், கவரை தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தனது வீட்டிலிருந்து சித்தி வீட்டிற்கு நடந்து சென்ற போது, 10,000 ரூபாய் பணம் சாலையில் கேட்பாரற்று இருந்ததை விக்னேஷ் பார்த்துள்ளார்.
இதனையடுத்து பணத்தை எடுத்துக் கொண்டு சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், சித்தியை அழைத்துக் கொண்டு குமரன் நகர் காவல் நிலையத்திற்கு வந்து 10,000 ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் சிறுவன் சாலையில் கிடந்த 10,000 ரூபாய் பணத்தை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் போலீசார் சிறுவனை வெகுவாக பாராட்டினர்.
தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தனது வீட்டிலிருந்து சித்தி வீட்டிற்கு நடந்து சென்ற போது, 10,000 ரூபாய் பணம் சாலையில் கேட்பாரற்று இருந்ததை விக்னேஷ் பார்த்துள்ளார்.
இதனையடுத்து பணத்தை எடுத்துக் கொண்டு சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், சித்தியை அழைத்துக் கொண்டு குமரன் நகர் காவல் நிலையத்திற்கு வந்து 10,000 ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும்
சிறுவன் சாலையில் கிடந்த 10,000 ரூபாய் பணத்தை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் போலீசார் சிறுவனை வெகுவாக பாராட்டினர்.
சிறுவன் சாலையில் கிடந்த 10,000 ரூபாய் பணத்தை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் போலீசார் சிறுவனை வெகுவாக பாராட்டினர்.