2020 இல் ஆயிரக்கணக்கான போன்களில் WhatsApp வேலை செய்யாது; வெளியானது ஹிட் லிஸ்ட்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

2020 இல் ஆயிரக்கணக்கான போன்களில் WhatsApp வேலை செய்யாது; வெளியானது ஹிட் லிஸ்ட்!


2020 இல் ஆயிரக்கணக்கான போன்களில் WhatsApp வேலை செய்யாது; வெளியானது ஹிட் லிஸ்ட்!
2020 ஆம் ஆண்டு வருவதற்கும் பல ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்தி கொள்வதற்கும் இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளன. ஆம்! இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் ஆனது அடுத்த சில வாரங்களில் மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


எந்தெந்த ஸ்மார்ட்போன்களில்?

அதாவது வாட்ஸ்அப் பட்டியலிட்டுள்ள “இந்த” போன்களின் வழியாக உங்களால் வாட்ஸ்அப் பயன்பாட்டை இயக்க முடியாது என்று அர்த்தம். ஏனெனில் வாட்ஸ்அப் நிறுவனம் சில பழைய மொபைல் தளங்களுக்கான ஆதரவை 2020 பிப்ரவரி 1 முதல் திரும்ப
பெறவுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் கூறும் “பழைய மொபைல்கள்” என்கிற பட்டியலில் உங்கள் போனும் உள்ளதா? இதோ நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்!

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் கூட!

வாட்ஸ்அப்பின் FAQ (கேள்வி பதில்) பிரிவின்படி, ஆண்ட்ராய்டு 2.3.7 இயக்க முறைமை மற்றும் அதற்கு முந்தய ஓஎஸ் கொண்டு இயங்கும் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளும், iOS 8 மற்றும் அதற்க்ய் முந்தைய ஓஎஸ் கொண்டு இயங்கும் ஐபோன்களும் மற்றும் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப்பை ஆதரிக்காது.
அதாவது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயக்க முறைமைகளின் இந்த பழைய பதிப்பை கொண்டுள்ள இந்த போன்களால் “பிப்ரவரி 1, 2020 க்குப் பிறகு புதிய வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை உருவாக்கவோ அல்லதுஏற்கனவே இருக்கும் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை சரிபார்க்கவோ முடியாது என்று அர்த்தம்
விண்டோஸ் போன்களுக்கு சற்று முன்பாகவே டாட்டா!

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களை தவிர்த்து, அனைத்து விண்டோஸ் போன்களுக்கான வாட்ஸ்அப் ஆதரவையும்
வருகிற டிசம்பர் 31, 2019 முதல் திரும்பப் பெறுகிறது. இதே மாதத்தில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 மொபைல் ஓஎஸ் ஆதரவை முடித்து கொள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தவிர ஜூலை 1, 2019 க்குப் பிறகு மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் வாட்ஸ்அப் கிடைக்காமல் போகலாம் என்றும் கூறியுள்ளது.

விண்டோஸ் போனில் வாட்ஸ்அப் சாட்டை எக்ஸ்போர்ட் செய்வது எப்படி?

ஒருவேளை நீங்களொரு விண்டோஸ் ஸ்மார்ட்போன் பயனர் என்றால்,
நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் சாட்களை வருகிற 31 டிசம்பர், 2019 அன்று இழக்க விரும்பவில்லை என்றால், உங்கள் சாட்களை சேமிக்க ஒரு வழி உள்ளது.
நீங்கள் export செய்ய விரும்பும் வாட்ஸ்அப் சாட்டை திறந்து, Group Info என்பதை கிளிக் செய்யவும். பின்னர் Export Chat எனும் விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர் குறிப்பிட்ட சாட் ஆனது மீடியா கோப்புகளுடன் டவுன்லோட் செய்யப்பட வேண்டுமா அல்லது மீடியா கோப்புகள் இல்லாமல் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டுமா என்கிற விருப்பங்கள் கேட்கப்படும்,
தேவையான விருப்பத்தை தேர்வு செய்ய உங்கள் எல்லா சாட்களையும் நீங்கள் எக்ஸ்போர்ட் செய்வீர்கள்.

ஜியோபோனிற்கும் ஆப்பு!

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் போன்களை தவிர்த்து ஜியோபோன் மற்றும்
ஜியோபோன் 2 உள்ளிட்ட KaiOS 2.5.1+ ஓஎஸ் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட போன்களிலும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது உங்களில் நிறைய பயனர்களை பாதிக்காது என்பது வெளிப்படை இருப்பினும் பாதுகாப்பிற்காக அல்லது தேவைக்காக இரண்டாவது ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் சிலரை இது பாதிக்கலாம்.

Subscribe Here