பள்ளிப் பாடத்தில் பகவத் கீதை ஸ்லோகங்கள் இடம்பெறும்: ஹரியானா முதல்வர் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளிப் பாடத்தில் பகவத் கீதை ஸ்லோகங்கள் இடம்பெறும்: ஹரியானா முதல்வர்


பள்ளிப் பாடத்தில் பகவத் கீதை ஸ்லோகங்கள் இடம்பெறும்: ஹரியானா முதல்வர்
பாடத்திட்டத்துக்குள் கீதையைக் கொண்டு வரும் முயற்சியை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில், ஹரியானா மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டார் பள்ளிப் பாடத்திட்டத்தில், பகவத்கீதை சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
ஹரியானாவில் நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த, ஹரியானா மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டார்தான் இப்படி தெரிவித்திருக்கிறார்.

மேலும் “பகவத் கீதை ஒன்றும் மத நூல் அல்ல.
அது வாழ்க்கையின் சாராம்சங்களை விளக்கும் நூல் ” என்று தெரிவித்துள்ளார். பள்ளிக்குழந்தைகளின் பாடத்திட்டத்தில் இவை அவர்களுக்கு புரியும்படி சேர்க்கப்பட வேண்டும் என்றும், அதற்காக இலகுவான ஸ்லோகங்கள் மாநிலத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திணிப்பை எதிர்த்த போதெல்லாம், இந்தியின் வழியாக சமஸ்கிருதத்தை நுழைக்க பாஜக முயற்சி செய்கிறது என்பதே பலரின் குரலாக இருந்தது.
ஆனால், தற்போது நேரடியாக பள்ளிகளுக்குள் பகவத்கீதையை கொண்டு செல்ல முயற்சி செய்கிறது பாஜக அரசு.
அண்மையில் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கட்டாயப்ப்பாடமாக பகவத் கீதை சேர்க்கப்பட்டதும், கடும் எதிர்ப்புக்குப் பிறகு அது விருப்பப்பாடம் என்று மாற்றப்பட்டதும் கூட தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த அறிவிப்பு ஹரியானாவில் வளிவந்திருக்கிறது. இது இந்திய அளவில் விரிவுபடுத்தப்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Subscribe Here