கடும் குளிரில் தமிழகம் டயாபடிக் நோயாளிகள் & பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கடும் குளிரில் தமிழகம் டயாபடிக் நோயாளிகள் & பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்


  1. தமிழகம் முழுவதும் கடந்த இருதினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் வானிலை அறிக்கைகளின் படி அடுத்த பத்து நாட்களுக்கோ அல்லது இந்த மாதம் முழுவதுமே கூட கடும் குளிர் நிலவும் வாய்ப்பு இருக்கிறது. 
  2. இந்த குளிரால் பெரிதும் பாதிக்கப்படப்போவது 
  3. வயதில் மூத்தவர்கள் 
  4. பச்சிளம் குழந்தைகள்
  5. டயாபடிக் நோயாளிகள்.
  6. அதிகமான குளிரால் டைல்ஸ், மார்பிள், க்ரானைட் போன்றவற்றில் ஃப்ளோரிங் செய்திருக்கும் வீடுகளில் வசிக்கும் 
  7. பெரியவர்கள்  கட்டாயம் வீட்டுக்குள்ளும் செருப்பு அணிய வேண்டும். 
  8. பச்சிளம் குழந்தைகளை கம்பளி துணிகொண்டு நன்றாக போர்த்தி வைக்க வேண்டும். அவர்களது காது துவாரங்களை மஃப்ளர் கொண்டு மூடி வைக்க வேண்டும். 
  9. பச்சிளம் குழந்தைகள் குறை வெப்ப நிலைக்கு செல்லும் வாய்ப்பு மிக அதிகம் .
  10. இதை Hypothermia என்போம். 
  11. இந்த Hypothermia சில நேரங்களில் உயிரைக் கொல்லும் தன்மை உடையது. ஆகவே கதகதப்பான சூழ்நிலையை குழந்தைக்கு உறுதி செய்வது பெற்றோரின் கடமை. 
  12. மிக முக்கிய தேவையன்றி, பச்சிளம் குழந்தைகளை  மாலை நேரத்திலோ, இரவிலோ, அதிகாலை நேரத்தில் வெயில் வரும் முன்னோ வீட்டுக்கு வெளியே கூட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். 
  13. அடுத்து, டயாபடிக் நோயாளிகளுக்கு கால் நரம்புகள் ஏற்கனவே பழுதாகியிருக்கக் கூடும். இதை Diabetic sensory neuropathy என்போம். 
  14. அவர்களது பாதங்களால் வெப்பத்தையோ வலியையோ உணர முடியாது. 
  15. ஆகவே, வெறும்  கால்களில் அவர்கள் நடக்கும் போது அல்லது ஒரே இடத்தில் வைத்திருக்கும் போது குளிர்ச்சியை உணர முடியாது. 
  16. அதனால் அவர்கள் காலை எடுக்காமல் அதே இடத்தில் வைத்திருப்பார்கள்
  17. இதனால் "Frost Bite" எனும் குளிரால் உருவாகும் தோல் நோய் வரக்கூடும்
  18. பொதுவாக Frost  bite என்பது உறைகுளிர் பிரதேசங்களில் மட்டுமே வரும் ஒரு நோய். உறைபனியில் அதிக நேரம் காலுறை அல்லது கையுறை இன்றி இருந்தால் இந்த பிரச்சனை வரும். 
  19. ஆனால் டயாபடிக் நோயாளிகளுக்கு Non freezing cold injury ஆக இது நடக்க வாய்ப்பு உள்ளது
  20. அவர்கள் நீண்ட நேரம் கால்களை குளிர்ந்த தரையில் வைத்திருந்தால் அவர்களின் கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டமானது குறையும். நமது உடலில் உள்ள ரத்த நாளங்கள் குளிரை உணர்ந்தால் சுருங்கும் தன்மை உடையன (vaso constriction) 



  • நீண்ட நேரம் இப்படி சுருங்கிய நிலையில் இருக்கும் ரத்த நாளங்கள் , அந்த நோயாளி எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் மீண்டும் விரியும் (vasodilatation) 
  • இப்படி மாறி மாறி சுருங்கி சுருங்கி விரியும் ரத்த நாளங்களால் அந்த இடத்தில் இன்ஃப்லமேசன் எனும் உள்காயம் உருவாகும். 
  • அந்த உள்காயத்தை சரிசெய்ய சிறிய அளவில் ரத்தக்கட்டிகள் உருவாகி அந்த பகுதியில் ரத்த ஓட்டத்தை முழுதாக தடை செய்யும். இதை Ischemia என்கிறோம். 
  • இந்த Frost bite எனும் நோய் நான்கு நிலையில் வரும் 
  • எப்படி தீக்காயத்திற்கு 1st,2nd,3rd,4th degree burns என்கிறோமோ
  • அதே போல 
  • Frost bite இலும் நான்கு டிகிரி காயங்கள் உண்டு 
  • 1st டிகிரி காயம் என்பது வெறும் மேல் தோலில் மட்டும் வரும். superficial injury 
  • இது பெரிய ஆபத்தில்லை. கிளப்பு தடவினால் சரியாகிவிடும்
  • 2nd டிகிரி காயம் என்பது தோலின் தடிமன் முழுவதும் குளிரால் சேதப்படுத்தப்பட்டிருக்கும். இந்த புண்ணில் படத்தில் காட்டப்பட்டது போல் கொப்புளம் வரும். 
  • இதற்கு டெடானஸ் ஊசி போட்டு. சரியான ஆண்டிபயாடிக் எடுக்க வேண்டும். 
  • 3rd டிகிரி காயம் என்பது தோலோடு சேர்ந்து  அதில் பெரிய அளவில் புண் உண்டாகி கிருமித்தொற்று வரும். 
  • 4th டிகிரி காயம் தோலோடு சேர்ந்து அதற்கு கீழ் உள்ள தசைகள் , எலும்பு போன்றவற்றை சேதப்படுத்தும். இது மிகவும் ஆபத்தான நிலை. உடனே சிகிச்சை எடுக்க வேண்டும். 
  • இந்த நிலையில் இருந்து விட்டால் அது முற்றிவிடும். முற்றி அந்த இடமே கருப்பாகி அழுகும். இதை Gangrene என்போம். அந்த விரல் தானாகவே உடலில் இருந்து ரத்த ஓட்டம் ஏதுமில்லாததால் உதிர்ந்து விடும். (auto amputation) 
  • 3rd and 4th degree பிரச்சனை எல்லாம் மைனஸ் அளவு வெப்பத்தில் வருபவை 
  • ஆனால்
  • 1. முதியவர்கள் மற்றும் டயாபடிக் நோயாளிகள் கட்டாயம் வீட்டில் செருப்புடன் தான் இருக்க வேண்டும். 
  • 2. இரவு உறங்கும் போது காலுறைகள் அணிந்து உறங்க வேண்டும். இது கால்கள் குளிரால் உறைவதை தடுக்கும்.
  • 3. பச்சிளம் குழந்தைகளுக்கு கட்டாயம்  கையுறை மற்றும் காலுறைகளை அணிவிக்க வேண்டும். கம்பளி ஸ்வெட்டர் அணிவிக்க வேண்டும். 
  • 4. கழிவறைக்குள் சென்று விட்டு வந்தால்   கட்டாயம் கால்களை நன்கு உலர்த்தி விட்டு படுக்க வேண்டும். குளிர்ந்த கால்களுடன் இருப்பது நல்லதல்ல. 
  • 5. முடிந்தவரை பச்சிளம் குழந்தைகளை வாடைக்காற்றில் வெளியே கூட்டிச்செல்லாமல் இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் கால்களை தினமும் உறங்கச் செல்லுமுன் நன்றாக ஏதேனும் புண் ஏற்பட்டிருக்கிறதா ? என்று ஆய்வு செய்து விட்டு உறங்க வேண்டும். இந்த ஆலோசனைகளை பின்பற்றுவோம்குளிரால் ஏற்படும் நோய்களில் இருந்து நம் குடும்பத்தாரை காப்போம்
  • .

    Subscribe Here