கெமிக்கல் மூலம் வாழைப் பழத்தைப் பழுக்க வைக்கிறார்கள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கெமிக்கல் மூலம் வாழைப் பழத்தைப் பழுக்க வைக்கிறார்கள்!


கெமிக்கல் மூலம் வாழைப் பழத்தைப் பழுக்க வைக்கிறார்கள்!
வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவுச் சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் பழக் கடை உரிமையாளர்கள் இடையே எத்தலின் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட பெரும்பாலான கடை உரிமையாளர்கள் இதுபோன்ற முறையில் பிற வாழப் பழ கடை உரிமையாளர்கள் பழங்களைப் பழுக்க வைக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டினர்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அனுமதி அளித்துள்ள என் ரிப் (en-rip) என்ற இரசாயனம் மூலம் பழுக்க வைப்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், “எத்தலினை பயன்படுத்தும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பேட்டி அளித்தார்.

Subscribe Here