105 மாணவர்கள் : ஒரு ஆசிரியர் கூட இல்லை.மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

105 மாணவர்கள் : ஒரு ஆசிரியர் கூட இல்லை.மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி




ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையில் உள்ள கொங்காடை என்னும் மலைக்கிராமத்தில், ‘அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி’ செயல்பட்டுவருகிறது. 1993-ல் தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, 2017ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 250 மாணவர்கள் இப்பள்ளியில் படித்துவருகின்றனர்
. 1 முதல் 5-ம் வகுப்பு வரை மட்டும் 105 மாணவர்கள் படித்துவருகிறார்கள்.
இந்த 105 மாணவர்களுக்கும் ஒரே ஒரு பெண் ஆசிரியர் மட்டும்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மகப்பேறு விடுப்பில் சென்றிருக்கிறார். அதையடுத்து, கடந்த ஆறுமாத காலமாக ஆசிரியர் இல்லாமலேயே
இந்த 105 மாணவர்களும் படித்துவந்திருக்கின்றனர். உயர்நிலைப் பள்ளிக்கு பாடமெடுக்கும் ஆசிரியர்கள், அவ்வப்போது வந்து குழந்தைகளுக்கு பாடமெடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்த விவகாரம் சமூக மற்றும் கல்வியியல் ஆர்வலர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது.



பள்ளியில் மாணவர்கள்
இதுகுறித்து, பழங்குடிகளுக்கான செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் சுடர் அமைப்பின் இயக்குநர் நடராஜ் அவர்களிடம் பேசினோம்.
“பள்ளியில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா, வகுப்பறையில் பாடங்கள் நடத்தப்படுகின்றனவா, குழந்தைகள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றனவா என எதையும் அரசு கண்டு கொள்ளாது.
ஆனால், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் என்கிறார்கள். பழங்குடியினக் குழந்தைகளுக்கு கல்வியில் தனித்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்றே
, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இப்பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டுமென கல்வி உரிமைச் சட்டம் சொல்கிறது. ஆனால் இங்கு, ஆசிரியரே இல்லாமல் 6 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவருகின்றனர். இது ஒரு மிகப்பெரிய சமூக அநீதி” என்றார்.

Subscribe Here