காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-01-2020 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-01-2020






🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 790

அதிகாரம் : நட்பு

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
 புனையினும் புல்லென்னும் நட்பு.

பொருள்:

நண்பர்கள் ஒருவருக்கொருவர் இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம் என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

இறைவனின் படைப்பில் மனிதர்கள் மட்டும்தான் புன்சிரிப்பைப் பிறருக்குப் பயன் கருதாமல் கொடுத்து மகிழ்விக்க முடியும்.எனவே நீங்கல் புன்சிரிப்பைக் கொடுத்து கொண்டே இருங்கள்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி

Christmas comes but once a year.

அமாவாசை சோறு என்றும் அகப்படாது.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words


1. MBBS - பொது மருத்துவம்
2. BDS - பல் மருத்துவம்
3. BSMS - சித்த மருத்துவம்
3. BAMS - ஆயுர்வேத மருத்துவம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. மினிக்காய்த் தீவு எந்த நாட்டிற்குச் சொந்தமானது ?

இந்தியா

2. போபால் விஷ வாயு கசிவு எந்த ஆண்டுஏற்பட்டது ?

1984

✡✡✡✡✡✡✡✡

Daily English

1. He joined the army when he was eighteen.
2. The thief was arrested yesterday.
3. I read an article about Indian rivers.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

ஆமணக்கு

🍊 ஆமணக்குச் செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும், ஒரு வகையான புதர்ச் செடியாகும்.

🍊 பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும்.

🍊 இதன் தண்டுப் பகுதியில் வெண்மையான மாவு படிந்து இருக்கும்.

🍊இந்தியாவில் அனைத்து இடங்களிலும், தரிசு நிலங்களிலும் இவை நன்றாக வளர்கின்றன .

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

கீழே விழுந்த சட்டை(சமாளித்தல்)

ஒரு நாள் முல்லா தன் வீட்டு மொட்டை மாடியில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.
கீழே சமையலறையில் அவர் மனைவி சமையல் செய்து கொண்டிருந்த போது தடால் என்ற சப்தத்துடன் ஏதோ ஒன்று கீழே விழுந்த சப்தத்தைக் கேட்டு மனைவி அது என்ன சப்தம் என்று கேட்டாள்.

கீழே விழுந்த முல்லா தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டவாறு ஒன்றுமில்லை மாடியிலிருந்து என் சட்டை கீழே விழுந்து விட்டது என்றார்.

ஒரு சட்டை கீழே விழுந்ததற்காகவா அவ்வளவு
பெரிய சத்தம் கேட்டது என ஆச்சரியத்துடன் கேட்டாள். இல்லை, சட்டைக்குள் நான் இருந்தேன் என்று கூறி முல்லா சமாளித்தார். அவர் மனைவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சென்னை - கோவை இடையே இயக்கப்படவுள்ள 68 சிறப்பு ரெயில்கள் குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

🔮லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகளில் இன்டர்போல் முன்னாள் தலைவர் மெங் ஹோங்வி-க்கு சீன நீதிமன்றம் பதிமூன்றரை ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.

🔮ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்
அறிமுக அணியான ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

🔮நேபாளத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் .

🔮இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அதிகமான இழப்பீட்டை பெற்றுத்தந்தது அதிமுக அரசு: முதல்வர் பழனிசாமி பேச்சு.


🔮தமிழகம்நெல் கொள்முதல் இலக்கு 25 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயம்...: அமைச்சர் காமராஜ் பேட்டி.

HEADLINES

🔮Delhi Assembly elections: Kejriwal files papers after six hours in queue.

🔮Nepal PM Oli positive of resolving all 'pending issues' with India.

🔮China coronavirus claims sixth victim, new cases top 300.

🔮Need to have fairer, more equitable terms in trade relations: Piyush Goyal at WEF 2020.


🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

Subscribe Here