5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை எந்த ஆண்டும் தொடங்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை எந்த ஆண்டும் தொடங்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர்


5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை எந்த ஆண்டும் தொடங்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ‘நீட்’ தேர்வு என்ற பலிபீடத்தை உருவாக்கி மாணவர்களின் உயர்கல்விக் கனவைச் சிதைத்த மத்திய, மாநில அரசுகள்;  இப்போது பள்ளி மாணவ,மாணவியரின் தொடக்கக் கல்விக் கனவையும்
சிதைக்கும் முயற்சியில் இறங்கி விட்டார்கள். மத்திய அரசு அமல்படுத்த துடித்து, மாநில அரசின் ஒப்புதலோடு அமலாக இருக்கும் 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறை என்பது ஏழை, அடித்தட்டு, நடுத்தர மக்களை கல்விச் சாலைக்குள் நுழைய விடாமலும், நுழைந்தவர்களையும் திட்டமிட்டு வெளியேற்றும் சதிச்செயலின் வெளிப்பாடு என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது.
திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்,
இது தொடர்பாக தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிக்கைகள் தமிழ்ச்சமூகத்தின் மாணவர்கள் நலனை உள்ளடக்கியதாகவும் இந்நாட்டின் சமூகநீதியின் குரலாகவும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு வருகிறது. இந்த அறிக்கைகள் மூலம் பாடம் கற்றுக் கொள்ளாத தமிழக அரசு தொடர்ந்து தனது அக்கறையின்மை மூலமாக தமிழக மாணவர் சமுதாயத்துக்கு எத்தகைய படுகுழியைத் தோண்டுகிறோம் என்ற ஆபத்தை உணராமல் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடக்கும் என்பது
அமைச்சர் செங்கோட்டையனின் கருத்து. அடுத்த ஆண்டு கைவிடப்படும் என்று சொல்லவில்லை அமைச்சர். கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று சொல்லி இருக்கிறார். மத்திய பாஜக அரசு அடுத்த ஆண்டும் தேர்வு நடத்தியாக வேண்டும் என்று சொன்னதும், அடுத்த ஆண்டும் நடத்துவார்கள். எனவே மத்திய மாநில அரசுகளின் கல்வித்துறை கழுத்து நெரிப்புகள் தொடரப்போகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. தமிழக அரசு 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை இந்த ஆண்டு நடத்தவும் கூடாது.
இனி எந்த ஆண்டும் தொடங்கவும் கூடாது என்ற எங்கள் கழகத் தலைவரின் நிலைப்பாட்டை,  அரசு ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Subscribe Here