அதிகரித்து வருகிறது. இது கடந்த செப்டம்பர் டிசம்பர் மாத..." வேலையின்மை உயர்வு"
வேலையின்மை உயர்வு
இது குறித்து CMIE வெளியிட்ட அறிக்கையின் படி, நாட்டில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கடந்த செப்டம்பர் டிசம்பர் மாதங்களில் 7.5% -மாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதில் மிக மோசமான விஷயம் என்னவெனில் 60% மேல் படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்பது தான்.கடந்த மே - ஆகஸ்ட் 2017ல் வேலையின்மை விகிதம் 3.8% இருந்த நி..."
"மோசமான ஆண்டு"
மோசமான ஆண்டு
ஆக கடந்த 2019ம் ஆண்டு படித்த இளைஞர்களுக்கு மிக மோசமான ஆண்டாகவே கருதப்படுகிறது. கடந்த மே – ஆகஸ்ட் 2017ல் வேலையின்மை விகிதம் 3.8% இருந்த நிலையில், தொடர்ந்து ஏழாவது முறையாக வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும் CMIE தெரிவித்துள்ளது.எத்தனை பேரிடம் கணக்கெடுப்பு
இந்த சர்வே 1,74,405 பேரிடம் எடுக்கப்பட்டதாகவும் CMIE தெரிவித்துள்ளது. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் கிராமப்புற இந்தியாவில், நகர்புற இந்தியாவை விட வேலையின்மை விகிதம் குறைவாகவே இருந்தது தான். இது கிட்டதட்ட 9% வித்தியாசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.வேலையின்மை அதிகம்
குறிப்பாக சொல்லப்போனால் இந்த நகர்புற வேலையின்மை விகிதம், தேசிய சராசரியை விட அதிகமாக இருந்தது. இது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் இது சரிவையே பிரதிபலிக்கிறது. கிராமப்புறங்களில் கடந்த செப்டம்பர் – டிசம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 6.8% ஆக இருந்தது.கிராமப்புறங்களில் வேலையின்மை
இந்தியாவின் வேலையின்மை விகிதத்தின் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் 66% பங்கினை கிராமப்புற இந்தியா கொண்டுள்ளது. ஆக கிராமப்புற இந்தியாவின் வேலையின்மை விகிதமானது ஒட்டுமொத்த வேலையின்மை விகிதத்தினை குறைப்பதில் பங்கு கொண்டுள்ளது. கிராமப்புறங்களில் வேலையின்மை குறைந்தால், அது ஒட்டுமொத்த விகிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.தரமற்றது
எனினும் கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பு தரமற்றது என்றும் CMIE தெரிவித்துள்ளது. CMIE அறிக்கையில் நகர்புற இளைஞர்களில், குறிப்பாக படித்தவர்கள் அதிகமாக வேலையின்றி காணப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளது. அதிலும் 20 – 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வேலையின்மை விகிதம் 37% இருப்பதாக அறிவித்தாலும், அவர்களில் 60% அதிகமான பட்டதாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டில் அவர்களில் சராசரி வேலையின்மை விகிதம் 63.4% இருந்ததாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.2019 மிக மோசமான ஆண்டு
இந்த பட்டதாரிகள் வேலையின்மை விகிதமானது. முந்தைய மூன்று ஆண்டுகளில் இருந்த வேலையின்மை விகித பட்டதாரிகளையும் விட அதிமாக இருந்தது. குறிப்பாக 2016ல் வேலையின்மை விகிதம் 47.1%, 2017ல் 47.1%- மாகவும், 2018ல் 55.1% மாகவும், ஆக 2019ல் இது 63.4% – மாக அதிகரித்து, மிக மோசமாக அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கைகள் கூறுகின்றன.இந்தியாவுக்கு சவால்
20 – 29 வயதிற்குட்பட்ட பட்டதாரிகளுக்கு வேலையின்மை விகிதம் 42.8% ஆக உள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.ஒரு முக்கிய சவால் என்னவெனில் எல்லா வயதினரும் உள்ள பட்டதாரிகளுக்கான வேலையின்மை விகிதம் 18.5% ஆக உள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரிகள் வேலையின்மை
மேற்கூறியது போலவே முதுகலை பட்டதாரிகள் வேலையின்மை விகிதமும் அதிகமாகவே உள்ளது. எனினும் இது 2016 முதல் இது அவ்வளவாக மோசமடையவில்லை. 2016ல் 24.6% ஆகவும், 2017ல் 25.4% ஆகவும், 2018ல் 22.8% ஆகவும் குறைந்துள்ளது. இந்த நிலையில் 2019ல் 23% ஆக அதிகரித்துள்ளது.