இந்தியாவில் அமலாகிறதா ‘இரு குழந்தைகள் திட்டம்’?- உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்தியாவில் அமலாகிறதா ‘இரு குழந்தைகள் திட்டம்’?- உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு


இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ”இரு குழந்தைகள் திட்டத்தை” அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இதனை வழக்கறிஞரும், டெல்லி பாஜக தலைவருமான சுனில் உபாத்யாய் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ”எந்தவொரு இந்திய குடிமகனுக்கும் தூய்மையான காற்று, குடிநீர், சுகாதாரம், அமைதி, இருப்பிடம், அடிப்படை வசதிகள், கல்வி பெறுவதற்கு அடிப்படை உரிமை உள்ளது.

இதுகுறித்து இந்திய அரசியல் சட்டப்பிரிவு 21ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே இத்தகைய வசதிகளை அளிக்க முடியும். எனவே இந்தியாவில் உள்ள தம்பதிகள் இனி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது.
இதனை அமல்படுத்த உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். ஆனால் அந்த நீதிமன்றம் மனுவை நிராகரித்து விட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளேன்.

இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கை எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.


| The 2-child policy has been re-ignited.

Supreme Court has issued a notice to the Centre on a PIL seeking enforcement of the 2-child norm.

TIMES NOW's Harish Nair with details. Listen in.


இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
. இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன முடிவை எடுக்கப் போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஐநா சபையின் ”தி எகனாமிஸ்ட்” இதழ் நடத்திய ஆய்வில் உலகில் மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் ஏராளமான இந்திய நகரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் முதலிடத்தில் கேரள மாநிலத்தின் மலப்புரம் உள்ளது. தமிழகத்தில் இருந்து ஒரேவொரு நகரமாக திருப்பூர் மட்டும் இடம்பிடித்துள்ளது.

Subscribe Here