இந்தியாவில் பரவுகிறதா? கொரோனா வைரஸ் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்தியாவில் பரவுகிறதா? கொரோனா வைரஸ்


சீனாவைத் தொடர்ந்து உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்த 100-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தீவிரம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 80 பேர் சீனாவில் உயிரிழந்துள்ளனர். 2,744 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 300 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நோய் வேகமாகப் பரவி வருவதால், மக்களின் போக்குவரத்தையும் நடமாட்டத்தையும் குறைக்கும் வகையில் சீனாவில் புத்தாண்டு விடுமுறை நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. பாம்பு போன்ற வன விலங்குகளிடமிருந்து இந்நோய் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதால், நாடு முழுவதும் வன விலங்குகள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், வனவிலங்குகள் உற்பத்தி மையங்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் வனவிலங்குகளை வாங்கவும் உணவுக்காகப் பயன்படுத்தவும் வேண்டாம் என்று அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“கொரோனா வைரஸின் தாக்கம் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டாலும் அதன் பரவல் மிகவும் வேகமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது” என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவிலிருந்து வெவ்வேறு நாடுகளுக்குப் பயணித்தவர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.



தாய்லாந்தில் 7 பேருக்கும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூரில் தலா 4 பேருக்கும், ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, மலேசியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தலா 3 பேருக்கும், வியட்நாமில் இருவருக்கும், நேபாளத்தில் ஒரு நபருக்கும் என சீனா தவிர, பிற உலக நாடுகளில் 33 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் கண்டறியப்பட்டவர்கள் அந்தந்த நாடுகளின் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாருக்கு மத்திய வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.


China

Also Read:
“சீன நாட்டு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருக்கிறோம். அங்கு வசிக்கும் இந்தியர்களில் ஒருவருக்கும் நோய் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் தேவைகள் தடையில்லாமல் கிடைத்து வருகின்றன. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சீன விவகாரங்களைக் கூர்ந்து கவனித்து வருகிறார்” என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவேஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிலை என்ன?

இந்நிலையில் சீனாவிலில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குத் திரும்பிய இளைஞருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டு, அம்மாநில அரசால் மருத்துவமனையில் தனி வார்டில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவரது ரத்த மாதிரி புனே தேசிய வைராலஜி நிறுவனத்துக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 18 நபர்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியிருக்கின்றனர்.


Fiight

“சீனாவிருந்து வந்த பயணிகள் அனைவரும் 28 நாள்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்” என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக சீனாவிருந்து திரும்பிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுக்கும் கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர் பாட்னாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பல்வேறு மாநிலங்கள் இறங்கியுள்ளன. கோவா மாநில அரசு இந்த நோய் தொடர்பான விவகாரங்களைக் கண்காணிப்பதற்காக சிறப்பு பணிக் குழுவை (Special Task Force) நியமித்துள்ளது. வைரஸ் தொற்று இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை தயாரிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான உயர்நிலைக் கூட்டம் பிரதமர் அலுவலகத்திலும் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பைக் கையாள்வதற்கு அனைத்து மாநில சுகாதாரத்துறைகளும் தயார் நிலையில் உள்ளன.


hospitalised

Also Read:
“சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த 137 விமானங்களில் பயணித்த 29,700 பயணிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் நோய் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று வெளிப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்பட்ட ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என்று மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Subscribe Here