சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது குறித்து தலைமை நீதிபதி சாஹி கண்டனம் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஹரி பரந்தாமன், கண்ணன், அக்பர் அலி ஆகியோர் பேரணியில் பங்கேற்றது வேதனை தருகிறது என கூறியுள்ள அவர், நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணியில் பங்கேற்றது நீதிமன்ற மாண்பை கெடுப்பதாக உள்ளது என கூறியுள்ளார். மேலும், நீதிமன்றம் பொது சொத்து என்பதை உணர்ந்து முன்னாள் நீதிபதிகள் செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, இவ்விகாரம் குறித்து உயர்நீதிமன்ற பாதுகாப்புக்குழு விசாரிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.